Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோ‌ப்பு வா‌ங்க குடு‌ம்ப அட்டைதாரர்களை வற்புறுத்தக்கூடாது : எ.வ. வேலு உ‌த்தரவு

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (20:45 IST)
பாமாயில் வாங்க வருபவர்களை மற்ற பொருட்களையும் சேர்த்து வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது எ‌ன்று‌ம் வெளிச்சந்தை விலையில் கூட்டுறவு கடைகள் மூலம் விற்பனை ச ெ‌ ய்யப்படும் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, சோப்பு போன்றவற்றை கட்டாயமாக வாங்க வேண்டும் என்று அட்டைதாரர்களை நியாயவிலைக் கடை பணியாளர்கள் வற்புறுத்தக்கூடாத ு எ‌ன்று‌ம் உணவு‌த்துறை அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு கூ‌றியு‌ள்ளா‌ர்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை, தம ி‌ ழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றின் அனைத்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான அலுவலர்களுடன் உணவு அமைச்சர் எ.வ. வேலு சென்னை, கோபாலபுரம், தம ி‌ ழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று ஆ‌ ய்வு ச ெ‌ ய்தா‌ர். இந்த ஆ‌ ய்வு நாளையும் (20.12.2008) தொடர்ந்து நடைபெறும்.

webdunia photoFILE
இன்றைய ஆ‌ ய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எ.வ. வேலு உரையாற்றுகையில், "பணவீக்கத்தினால் அனைத்து நாடுகளிலும் விலைவாசி உயர்ந்திருந்தாலும், ஏழை, எளிய மக்கள் இதனால் எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் கருணா‌நி‌த ி சிறப்பு பொது விநியோகத் திட்டத்தையும், மானிய விலையில் மளிகைப் பொருள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளார்.

நியாயவிலைக் கடைகள் மூலம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் போன்றவை வழங்கப்படுவதால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாமாயில் ஒரு கிலோ ரூ.58-க்கு வெளிச் சந்தையில் விற்பனை ச ெ‌ ய்யப்பட்டபோது நியாயவிலைக் கடைகள் மூலம் ரூ.40-க்கு விற்பனை ச ெ‌ ய்யப்பட்டது;

இதன் விலை ரூ.35-க்கு குறைக்கப்பட்டபோது வெளிச்சந்தை விலையும் கணிசமாக குறைந்தது. நியாயவிலைக் கடைகள் மூலம் விற்கப்படும் பாமாயில் விலை மீண்டும் ரூ.30-ஆக கடந்த வாரம் (15.12.2008) முதல் குறைக்கப்பட்டுள்ளது.

அனைத்து அட்டைதாரர்களும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்களை தங்குதடையின்றி பெற வேண்டும், எந்த பொருள் வேண்டுமானாலும் மாதம் முழுவதும் எப்போது சென்றாலும் வாங்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

நியாயவிலைக் கடைகளில் இருப்பு இல்லாத நிலை ஏற்படாதவண்ணம் கூட்டுறவு சங்கச் செயலர்களும், தனி அலுவலர்களும் கவனமாக இருக்க வேண்டும். பாமாயில் வாங்க வருபவர்களை மற்ற பொருட்களையும் சேர்த்து வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது.

வெளிச்சந்தை விலையில் கூட்டுறவு கடைகள் மூலம் விற்பனை ச ெ‌ ய்யப்படும் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, சோப்பு போன்றவற்றை கட்டாயமாக வாங்க வேண்டும் என்று அட்டைதாரர்ளை நியாயவிலைக் கடை பணியாளர்கள் வற்புறுத்தக்கூடாது.

பகுதிநேரக் கடைகளில் மிகக் குறைந்த அளவில் குடும்ப அட்டைகள் இருந்தாலும் அக்கடையிலுள்ள குடும்ப அட்டைகளின் அடிப்படையில் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் முதலில் வருபவர்களுக்கு பொருள் வழங்கப்பட்டாலும், மற்றவர்களுக்குரிய பொருள்கள் பிறகு வரும் அட்டைதாரர்களுக்கு குறையின்றி கண்டிப்பாக வழங்க வேண்டும்.

அனைத்து பகுதி நேரக் கடைகளுக்கும் சிறப்பு பொது விநியோகப் பொருட்களை தவறாமல் பிரித்து வழங்கி பகுதி நேரக் கடைகளிலும் இப்பொருட்களின் இருப்பு வைக்க வேண்டும். இருப்பு நிலையை தினந்தோறும் ஆ‌ ய்வு ச ெ‌ ய்து தேவைப்படும் இடங்களுக்கு உடனுக்குடன் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.

மண்டல மேலாளர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். உரிய நேரத்தில் நியாயவிலைக் கடைகளுக்கு தேவையான பொருட்களை தருவித்து கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட வேண்டும். கிடங்குகளில் இருப்பு இல்லாத நிலை ஏற்படாமல் மண்டல மேலாளர்கள் தம ி‌ ழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைமையகத்தை தொடர்பு கொண்டு உடன் இருப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் தேவைக்கு அதிகமான பொருட்களை கிடங்குகளில் நீண்ட நாட்களுக்கு தேக்கி வைக்கக்கூடாது. உடனுக்குடன் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் அரிசி, சர்க்கரை போன்றவற்றை முன் நகர்வு ச ெ‌ ய்யும்போதே சிறப்பு அத்தியாவசியப் பொருட்களையும், மானிய விலையில் வழங்கும் மளிகைப் பொருள் பாக்கெட்டுகளை சேர்த்து நகர்வு ச ெ‌ ய்து இருப்பு வைக்க வேண்டும்.

ஜனவரி திங்களில் நிகழும் பொங்கல் திருநாளுக்காக வழங்கப்படும் சர்க்கரை பொங்கல் தயாரிக்கத் தேவையான பொருட்களான பச்சரிசி 500 கிராம், வெல்லம ் 500 கிராம், பாசி பருப்பு 100 கிராம் மற்றும் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்க ா‌ ய் 20 கிராம ் ஆகியவற்றை பையிலிட்டு பொட்டலத்தில் அட்டைதாரர்கள் அனைவருக்கும் முறையா க குறையின்றி அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் 2009 ஜனவரி 1ஆம் தேதி முதல ் 14 ஆம் தேதி வரை விநியோகிக்க அனைத்து மாவட்ட அலுவலர்களும் நடவடிக்கை எடுக் க வேண்டும ்" எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் எ.வ. வேல ு கூ‌றினா‌ர ்.

தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் ரூ.1300 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை..!

அந்தரங்க புகைப்படம்... கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த தந்தை - மகன்..!

மாணவிகளை கடித்த பாம்பு.. சர்வே எடுக்க வேற ஆளே கிடைக்கலையா? - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

35 பேரை காரை ஏற்றிக் கொன்ற நபர்! சாலையெங்கும் சிதறிக் கிடந்த பிணங்கள்! - சீனாவை உலுக்கிய சம்பவம்!

Show comments