தம ிழ ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் 71-வது வாரியக் கூட்டம் தொழிலாளர் நல அம ைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் சென்னை, தேனாம்பேட்ட ையில் உள்ள தம ிழ்நாடு தொழிலாளர் நல வாரியக் கருத்தரங்குக் கூடத்தில் இன்று நடைபெற்றது.
TN.Gov.
TNG
முன்னதாக தொழிலாளர் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு பல நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
கூட்டத்தில ், தொழிலாளர ், வேலைவ ாய்ப ுப்புத்துறை அரசு முதன்மைச் செயலர் டாக்டர் பிரபாகரராவ், தொழிலாளர் ஆணையாளர் சுகுமாரன், நிதித்துறை இணைச் செயலர் வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன், பிரபாவதி, ராணி, நிர்வாகத் தரப்பு பிரதிநிதிகள் டி.என்.ஜவஹர்லால், ராம்குமார், ஸ்ரீ நாகேஸ்வர், தொழிலாளர்கள் தரப்பு பிரதிநிதி டி.ஆர்.எஸ்.மணி, பி.எல்.சுப்பையா, ஆர்.இராமன் ஆகியோர் கலந்து கொண்டனர ்.
இக்கூட்டத்தின் விவாதப் பொருட்களை வாரியச் செய லர் க.பலராமன் ம ுன்மொழிந்தார். வாரியத்தின் 2007-08ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்க ை, 2009-10 ஆம் ஆண்டிற்கான திட்ட மதிப்பீடு ஆகியவற்றை ஒருமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர் நலநிதி பங்குத் தெ ாகையினை உயர்த்துதல் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பாக இதர பல்வேறு தீர்மானங்கள் வாரிய உறுப்பினர்களால் விவாதிக்கப்பட ்டது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.