Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - வேலூர் பு‌திய மின்சார ரயில் : டிச.21இ‌ல் துவ‌க்க‌ம்

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (13:55 IST)
சென்னை கடற்கரை - வேலூர் இடையே பு‌‌திய மின்சார ரயில் சேவ ையை வரு‌ம் 21ஆ‌ம ் தேதி ம‌த்‌திய ர‌‌யி‌ல்வே‌த்துறை இணை அமை‌ச்ச‌ர் ஆ‌ர்.வேலு துவ‌க்‌கி வை‌க்‌கிறா‌ர்.

இத ுகு‌றி‌த்த ு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ்," சென்னை கடற்கரை - வேலூர் இடையே புதிய மின்சார ரெயில் சேவையை மத்திய ரயில்வே இணை அமை‌ச்ச‌ர் ஆர்.வேலு 21 ஆ‌ம ் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

இதற்கான தொடக்கவிழா வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நடக்கிறது. இந்த விழாவில், சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையே புதிய ரயிலையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

புதிய மின்சார ரயில் சேவையை தொடர்ந்து சென்னை கடற்கரை - வேலூர் இரு மார்க்கத்திலும் ரயில்கள் இயக்கப்படும். வேலூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கடற்கரைக்கு காலை 9.10 மணிக்கு வந்து சேரும். இதேபோல், கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப் ப‌ட்ட ு இரவு 9.15 மணிக்கு வேலூரை சென்றடையும்.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.12 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் பகல் 12.15 மணிக்கு திருமால்பூருக்கு செல்லும். இதேபோல், திருமால்பூரில் இருந்து பகல் 1.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடற்கரைக்கு மாலை 4.35 மணிக்கு வந்தடையும்.

இந்த மின்சார ரயில்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

மேலும், சென்னை மூர்மார்க்கெட் - அரக்கோணம் இடையே மின்சார விரைவு ரயில் சேவை 22 ஆ‌ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

இதன்படி, மூர்மார்க்கெட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் அரக்கோணத்துக்கு இரவு 7.30 மணிக்கு செல்லும். இந்த ரயில் பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும ்.

இ‌ந்த பு‌திய ர‌யி‌ல்க‌ள் அனை‌த்து‌ம் 22ஆ‌ம் தே‌தி முத‌ல் ‌தினச‌ரி இய‌க்க‌ப்படு‌ம்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இதுவரை 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. கேசி வீரமணி குற்றச்சாட்டு..!

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மில்லி மீட்டர் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கிடைப்பது எப்போது? தேசிய தேர்வு முகமை தகவல்..!

டீசல் பேருந்துகள் CNG பேருந்துகளாக மாற்றம்! - போக்குவரத்துக் கழகம் எடுத்த முடிவு!

மகன் பதவியை பறித்து அப்பாவுக்கு பதவி கொடுத்த மாயாவதி.. உபியில் பரபரப்பு..!

Show comments