Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ங்களூரு‌க்கு இட‌ை‌த்தே‌ர்த‌ல் நட‌‌த்த கோ‌ரிய மனுவை ‌நிராக‌ரி‌த்தது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்

Webdunia
புதன், 17 டிசம்பர் 2008 (13:48 IST)
கடலூ‌ர ் மாவ‌ட்ட‌ம ், மங்களூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ‌நிராக‌ரி‌த் த சென்னை உயர் நீதிமன்றம ், சட் ட‌ ப்பேரவை‌யி‌ன ் உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தத ு.

கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதிக்குட்பட்ட இவனூர் ஊராட்சி மன்ற தலை வ‌‌ ர ் ராமலிங்கம ், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அ‌ந் த மனு‌வி‌ல ், மங்களூர் (தனி) சட்டமன்ற தொகுதி உறுப்பினரான செல் வ‌ ப்பெரு‌ந்தக ை தனது எம ். எல ். ஏ பதவியை கடந்த மாதம் 11ஆ‌ம ் தேதி ராஜினாமா செய்ததாகவும், இது குறித்து பேரவ ை தலைவ‌ரிட‌ம ் ‌ வில‌க‌ல ் கடிதத்தை அவர் அளித்ததாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

அதே தினத்தன்று செல் வ‌ ப்பெரு‌ந்தக ை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்ததாகவும், அவர் அக்கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி ஒரு ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பினரே ா அல்லது நாடாளும‌ன் ற உறு‌ப்‌பினரே ா ஒரு கட்சியிலிருந்து மற்ற கட்சிக்கு மாறினால் அவர் தகுதியிழக்க நேரிடும். இதன்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த செல் வ‌ ப்பெரு‌ந்தகை‌யி‌ன ் எம ். எல ். ஏ பதவியும் ரத்தாகி விட்டதாகத்தான் அர்த்தம்.

எனவே மங்களூர் தொகுதி காலியாக இருப்பதாக கருதி, அந்த அடிப்படையில் அதற்கான இடைத்தேர்தலை, திருமங்கலம் இடைத் தேர்தலுடன் நடத்த உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) முகோபாத்யாயா, நீதிபதி தனபாலன் ஆகியோரை கொண்ட முதல் அம‌ர்வ ு முன்பு இ‌ன்ற ு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் வழ‌க்க‌றிஞ‌ர் ராஜா கலிபுல்லா ஆஜரா‌கி, ''செல்வப்பெருந்தகை ராஜினாமா கடிதத்தில் குறைபாடு உள்ளது. இதனால் ராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை' என்றார்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த் த ‌ நீ‌திப‌திக‌ள், மனுதாரர் தமது கோரிக்கையை அவை‌த்தலைவ‌ரிட‌ம் தா‌ன ் தெரியப்படுத்த வேண்டும ். இந்த மனுவை உரிய காலத்துக்கு முன்பாக இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்வது பொருத்தமாக இராத ு. மேலும் சட் ட‌ ப்பேரவை‌யி‌ன் உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை ‌நிராக‌ரி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments