Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூ‌த்து‌க்குடி‌யி‌ல் நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா

Webdunia
புதன், 17 டிசம்பர் 2008 (13:17 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பெ‌ய்த கனமழையா‌ல் சேத‌ம் அடை‌ந்த சாலைகளை செ‌‌ப்ப‌‌னிட‌க் கோ‌ரியு‌ம், மரு‌த்துவமனை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள சுகாதார ‌‌சீ‌ர்‌கே‌ட்டை ச‌‌ரி செ‌ய்ய‌க் கோ‌ரியு‌ம் அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் நாளை தூ‌த்து‌க்குடி நகரா‌ட்‌சி மு‌ன்பு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், அண்மையில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளதன் காரணமாக சுகாதார சீர்கேடுகள் உருவாகி உள்ளதாகவும், பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் தொற்றுநோய் பரவக் கூடிய அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போடப்பட்ட சாலைகள் அனைத்தும் தரமற்றவையாக இருந்ததால், அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக அனைத்துச் சாலைகளும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதாகவும், இதன் காரணமாக போக்குவரத்திற்கு மிகுந்த சிரமப்படுவதோடு ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்களுக்கு நோய் பரவும் சூழ்நிலை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ளாத அரசைக் கண்டித்தும், சாலைகளை உடனடியாக செப்பனிட வலியுறுத்தியும், மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்ட அ.இ.அ. த ி. ம ு. க சார்பில் நாளை (18 ஆ‌ம் தே‌த ி) காலை 10 மணியளவில் தூத்துக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments