Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதானவ‌ர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்: தா.பா‌ண்டி‌ய‌ன்

Webdunia
'' சாலை மறியலில் கைது செய்யப்பட் டவ‌ர்களை உடனே த‌மிழக அரசு விடுதலை செய்ய வேண்டும ்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் க‌ட்‌சி‌யி‌ன் மாநிலச் செயலர் தா.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்க ை‌யி‌ல், கனமழையால் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர் மாவட்ட விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள நிவாரண தொகையை உயர்த்தக் கோரியும், நிவாரணப் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்க கோரியும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், அ. த ி. ம ு. க, ம. த ி. ம ு. க கட்சிகளை சேர்ந்தவர்களும் சாலை மறியலில் கலந்து கொண்டனர். சாலை மறியலில் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர்.

மறியலின்போது கைது செய்யப்பட்ட ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ், தலைவர்கள், விவசாயிகள ், தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments