தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு மர்ம கடிதம் அவரது வீட்டிற்கு வந ்துள்ளத ு.
webdunia photo
FILE
சென்னை எழும்பூரில் இருந்து அந்த கடிதம் அனுப்பப்பட ்டுள்ளது. இந்த கடிதத்தில் எழும்பூர் ரஜினி கண்ணன் என்பவர் எழுதியதாக குறிப்பிடப்பட ்டுள்ளது.
அந்த கடிதத்தில், பாலு... பேசிவருவது முறையல்ல என் அன்னை கூறிய பிறகும் பேசுவது நல்லது அல்ல. நீ பேசுவது சுயசார்பு அல்ல. சுய திமிர். விலாசத்தின் கருப்புத்தடம். நீ விலகிக் கொள்வது நல்லது. அல்லது மாற்றப்படும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் வேல்ராஜ ், சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆணையர் ராதாகிருஷ்ணனிடம ் புகார ் மன ு ஒன்ற ை அளித்தார ். இது குறித்து விசாரணை நடத்த எழும்பூர் உதவி ஆணையருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.