சமையல் எரிவாயு வில ையை குறைக்க கோரி வரும் 13ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்ச ித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில ், உலகச்சந்தையில் கச்சா எண ்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்திருக்கும் நிலையில், தற்சமயம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு ஓரளவு மட்டுமே குறைத்துள்ளது. ஆனால் சமையல் எரிவாயுவின் விலை சற்றும் குறைக்கப்படவில்லை.
இதனால் பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தி உருவாகியுள்ளது. எனவே சமையல் எரிவாயுவின் விலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்த விலை அளவிற்கு உடனடியாக குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த கோரிக்கை வந்தும் மத்திய அரசு செவி சாய்க்காமல் சமையல் எரிவாயு விலையை இதுவரையிலும் குறைக்கவே இல்லை.
எனவே மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும், உடனடியாக சமையல் எரிவாயு விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 275 ரூபாயாக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வரும் 13ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.