Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை ராணுவ‌த் தளபத‌ி பொ‌ன்சேகாவு‌க்கு கருணாநிதி கடு‌ம் க‌ண்டன‌ம்

Webdunia
திங்கள், 8 டிசம்பர் 2008 (16:18 IST)
இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா, தமிழக தலைவர்களை விமர்சனம் செய்து பேசியது உண்மை என்றால் அது கண்டிக்கத்தக்கது எ‌ன்ற ு கூ‌றி ய முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி, இங்குள்ள தமிழக தலைவர்கள ் ஒருவரைவொருவர் விமர்சனம் செய்வது என்பது வேறு, அய‌ல்நாட்டவர் ஒருவர் தமிழக தலைவர்களை இப்படி விமர்சனம் என்பது வேறு. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எ‌ன்றா‌ர ்.

webdunia photoFILE
செ‌‌ன்ன ை தலைமை‌ச ் செயல‌க‌த்த‌ி‌ல ் இ‌‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்கள ை ச‌ந்‌தி‌த் த அவ‌ர ், தமிழக அரசு வெள்ள நிவாரண பணிகளை சிறப்பான முறையில் செய்து வருகிற போதிலும் அதனை குறை கூறுவதும் அல்லது விமர்சனம் செய்வதும்தான் எதிர்க்கட்சிகளின் போக்காக உள்ளது. அப்படி அவர்கள் கூறும் குறைகளை திருத்திக்கொண்டு நாங்கள் வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு வருகிறோம் எ‌ன்றா‌ர ்.

கடந்த ஆண்டு மத்திய அரசிடம் கேட்ட வெள்ள நிவாரண தொகை உரிய அளவு கிடைக்கவில்லை எ‌ன்ற ு கூ‌றி ய கருணா‌நி‌த ி, இந்த ஆண்டு கேட்ட நிவாரணத் தொகை நிச்சயம் கிடைக்கும் என்று நம ்‌ பி‌க்க ை தெ‌ரி‌‌வி‌த்தா‌ர ்.

ம‌த்‌தி‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் ஆ‌ட்‌ச ி!

தற்போது 5 மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள் முழுமையாக கிடைக்கவில்லை. இருப்பினும் வந்துள்ள வரையில் காங்கிரஸ் கட்சிக்கு இது வெற்றி என்றுதான் கூற வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சியில் அமரும் எ‌ன்றா‌ர ் கருணா‌நி‌த ி.

இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா, தமிழக தலைவர்களை விமர்சனம் செய்து பேசியது உண்மை என்றால் அது கண்டிக்கத்தக்கது எ‌ன்ற ு கூ‌றி ய முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி, இங்குள்ள தமிழக தலைவர்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளின் அடிப்படையில் ஒருவரைவொருவர் விமர்சனம் செய்வது என்பது வேறு, அய‌ல்நாட்டவர் ஒருவர் தமிழக தலைவர்களை இப்படி விமர்சனம் என்பது வேறு. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எ‌ன்றா‌ர ்.

இலங்க ை‌ த ் தமிழர் பிரச்சனையில் போர் நிறுத்தம் வேண்டுமென்பதையே சமீபத்திய டெல்லி பயணத்தின்போது பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் வலியுறுத்தினோம ். மத்தியில் அமைய உள்ள புதிய அமைச்சரவையில் தமிழகத்துக்கு வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சிதான் எ‌ன்றா‌ர ் கருணா‌நி‌த ி.

மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க அரசின் அத்தனை துறைகளின் சார்பாக கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த கருணா‌நி‌த ி, மத்திய அரசிடம் கேட்டிருந்த 2,000 மொகாவட் மின்சாரத்தில் இந்த வாரம் ஆயிரம் மெகாவாட்டும், அடுத்த மாதம் ஆயிரம் மெகாவாட்டும் கிடைக்கும் எ‌ன்றா‌ர்.

அருந்ததியர் ஒதுக்கீடு அமைப்பது தொடர்பான துணை கமிட்டி குழுவினர் இன்று அறிக்கை தந்துள்ளனர். விரைவில் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றினா‌ர ்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments