எங்கும் மனிதநேயம் செழிக்க, எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம். எல்லோரிடமும் இன்முகம் காட்டி, இன்சொல் கூறி இதயங்கள் இணைந்து இன்புற ஏற்ற வழி அமைப்போம் என இத்திருநாளில் அனைவரும் உறுதி ஏற்போமாக! என்ற ு முதலமைச்சர் கருணாநிதி பக்ரீத் வாழ்த்து செய்தி கூறியுள்ளார்.
webdunia photo
FILE
முதலமைச்சர் கருணாநிதி இன்று விடுத்துள்ள பக்ரீத் பெருநாள் வாழ்த்துச் செய்தியில ், தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பெரு நாள் இஸ்லாமிய மக்களால் இன்று (9.12.2008) எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்நாளைக் கொண்டாடும் தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் நலமும் வளமும் பெருகிட எனது இதயம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியவர் இடர்தீர வழங்கி மகிழ்வதை "ஈத்துவக்கும் இன்பம்'' என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இஸ்லாமியப் பெருமக்களுக்கு வழி காட்டுவது இந்த பக்ரீத் பெருநாள்.
நபிகள் நாயகத்திடம் ஒரு மனிதர், "இஸ்லாமில் சிறந்தது எது?'' என்று கேட்க, அதற்கு அவர்கள், "ஏழைகளுக்கு உணவளித்தல், நீங்கள் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் கூறுதல்'' என்றார்கள். ஏழைகளுக்கு உணவளித்தல் மூலம் இரக்க உணர்வும், எளியோரை அர வணைக்கும் பெருந்தன்மையும் வளரும், சலாம் கூறுவதன் மூலம் இதயங்கள் இணையும், மனித மனங்களில் நேச ஊற்றுகள் பொங்கிப் பெருகும். அது தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் மனத்தூய்மையையும், நெருக்கத்தையும், சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்கிறது இஸ்லாம் நெறி.
இந்த நெறி தழைக்க, எங்கும் மனிதநேயம் செழிக்க, எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம். எல்லோரிடமும் இன்முகம் காட்டி, இன் சொல் கூறி இதயங்கள் இணைந்து இன்புற ஏற்ற வழி அமைப்போம் என இத்திருநாளில் அனைவரும் உறுதி ஏற்போமாக! என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.