Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும்: வைகோ

Webdunia
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்பது கண்துடைப்பு எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகே ா, சமையல் எரிவாயு விலையையும் க ுறைத்திட வேண்டும் என்று வ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளா‌ர்.

PTI PhotoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வ ெளியிட்டுள்ள அறிக்கையில ், மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் ஐந்தும், டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் இரண்டும் குறைத்துவிட்டதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை ஏமாற்றுகின்ற மாய்மால அறிக்கை ஆகும். பன்னாட்டு சந்தையில் கச்சா எண ்ணெ‌ய் விலை உயர்வுதான் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்பட்டது.

தற்போது பன்னாட்டு சந்தையில் கச்சா எண ்ணெ‌ய் விலை ஏறத்தாழ 2004ஆம் ஆண்டு நிலவரப்படி வந்துவிட்டது. இதனை கருத்தில் கொள்ளாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்கனவே 2008ஆம் ஆண்டு ஜ ூனில் அதிகரித்த விலையை மட்டும் குறைத்து உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் எண ்ணெ‌ய் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க வழிவகுத்து பெட்ரோல், டீசல் விலையை, 5 முறை உயர்த்தி பொதுமக்கள் தலையில் தாங்கமுடியாத பாரத்தை சுமத்தியது மத்திய அரசு. இதன் விளைவாகவே அனைத்துப் பொருட்களின் விலையேற்றத்துக்கும் காரணமாயிற்று.

தற்போது பன்னாட்டு சந்தையில் கச்சா எண ்ணெ‌ய ்யின் விலை கடுமையாக குறைந்துள்ள போதும் மக்களின் சிரமங்களைப் போக்க முன்வராமல் ஒரு கண்துடைப்பு வேலையாக பெட்ரோல், டீசல் விலையை பெயரளவில் குறைத்து உள்ளது. சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டதால் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

ஆகவே, மத்திய அரசு 2004ஆம் ஆண்டு நவம்பரில் இருந்த விலை நிலவரப்படி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.33.70 எனவும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.21.73 எனவும் நிர்ணயம் செய்து உடனடியாக அறிவிப்பு செய்திட வேண்டும். இதைப்போன்று சமையல் எரிவாயு விலையையும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.183 ஆக குறைத்திட வேண்டும். இந்த நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக செய்தால்தான் விலைவாசி குறையுமே தவிர, வேறு எந்த அறிவிப்பும் மக்களுக்கு ஒரு துளி அளவுக்கும் பலன் அளிக்காத ு'' எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments