Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் 42 பே‌ர் கைது!

Webdunia
ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (16:02 IST)
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந ்து ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் 42 பேரை இ‌ந்‌திய கடலோர காவ‌ல் படை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். அவ‌ர்க‌ளி‌ன ் 8 ‌விச ைபடகுகளு‌ம் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்‌ப‌ட்டத ு.

இந்திய கடலோர காவல் படையினர ், கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட ்டு‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அப்போது இலங்கை மீனவர்கள் 42 பேர் 8 விசைப்படகில் இந்திய கடல் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இதையடு‌த்து அ‌ப்பகு‌தி‌க்கு ‌விரை‌ந்த கடலோர காவல் படையினர் அவ‌ர்க‌ளி‌ன் படகை சுற்றி வளைத்து ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த 42 மீனவர்களை கைது செய்ததோடு அவ‌ர்க‌ளி‌ன் 8 படகுகளையு‌ம் பறிமுதல் செய்தனர்.

‌ பி‌ன்ன‌ர் அவ‌ர்‌க‌ள் அனைவரும் சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு காவ‌ல்துறை‌யின‌ரி‌ட‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டன‌ர். தொட‌ர்‌ந்து அவ‌‌ர்க‌ளிட‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

அ‌ண்மை‌யி‌ல், பா‌கி‌ஸ்தா‌னி‌ன் கரா‌ச்‌சி நக‌ரி‌ல் இரு‌ந்து கட‌ல் வ‌ழியாக வ‌ந்த பய‌ங்கரவா‌திக‌ள் மும்பை தாக்குதலி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து கடலோர பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டு ‌தீ‌விரமாக க‌ண்கா‌ணி‌க்க‌ப்‌ப‌ட்டு வரு‌கிறது எ‌ன்பது கு‌றி‌ப்‌பி‌ட‌‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments