Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள நிவாரணம் ரூ.1,893 கோடி தேவை!

Webdunia
ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (12:01 IST)
வெ‌ள்ள‌ப ் பா‌தி‌‌ப்ப ு பகு‌‌திக‌‌ளி‌ல ் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்கா க ரூ.1,893 கோடி நிதி தேவைப்படும் என்று, நிவாரணப் பணிகளை கண்காணித்து துரிதப்படுத்த அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட துணை அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இத ு தொட‌ர்பா க தமிழக அரசு வெளியிட்டு‌ள் ள செய்த ி‌ க்கு‌றி‌ப்‌பி‌ல ், " வெள்ள நிவாரண பணிகள் குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை துணைக்குழுவின் இரண்டாம் கூட்டம் நேற்று நடந்தது.

இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், முந்தை ய தினம்வரை மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் குறித்த தகவல்கள் குழுவின் முன் வைக்கப்பட்டன. இதன்படி, இதுவரை வெள்ளத்தால் 189 பேர் இறந்துள்ளதாகவும், 4,997 கால்நடைகள் உயிர் இழந்துள்ளதாகவும், 5,06,675 குடிசைகள் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 4,93,970 குடிசைகள் பகுதியாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 1,597 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மரணமடைந்த 189 நபர்களில், 139 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுவரை 94,367 முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று 47,548 பகுதியாக சேதமடைந்த குடிசைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

மேலும், தற்போது 595 வெள்ள நிவாரண முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இவைகளில் 43 முகாம் காஞ்சி மாவட்டத்திலும், 47 முகாம் நாகை மாவட்டத்திலும், தஞ்சை, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு முகாம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் 502 முகாம்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இம்முகாம்களில், 3,23,615 நபர்கள் தற்போது தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை, பாதிக்கப்பட்டோருக்கு 29.57 கோடி ரூபாய் நிவாரணத்தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் உள்ள 10,87,712 வீடுகளுக்கு ரூபாய் ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கணக்கீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாநில நெடுஞ்சாலைகளில் 2062 கிலோ மீட்டர் சாலைகள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் 383 கி.மீ. தூரம் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றில் 326 கி.மீ. டபிள்யு.பி.எம். அளவுக்கு சரிசெய்யப்பட்டுள்ளன. மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் பராமரிக்கப்படும் சாலைகளில் 945 கி.மீ. சாலைகள் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றில் 30 கி.மீ. டபிள்யு.பி.எம். அளவுக்கு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை மூலம் பராமரிப்பிலுள்ள கண்மாய்களைப் பொறுத்தவரையில் 1,957 சேதமடைந்துள்ள கண்மாய்களில், 1,149 கண்மாய்கள் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கண்மாய்களை டிச‌ம்ப‌ர ் 15 ஆ‌ம ் தே‌திக்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள 2,439 கிராமங்களில், 93 கிராமங்களை தவிர மீதமுள்ள கிராமங்கள் அனைத்துக்கும் மின்சார விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 93 கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிவாரணப் பணிகளை மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டுமென்று அமைச்சரவை துணைக்குழு அறிவுரை வழங்கியது. பாதிப்படைந்த வீடுகளுக்கு, நிவாரணத் தொகை வழங்கும் பணியை விரைவுபடுத்தவும், பாதிப்புக்குள்ளான பயிர்களை கணக்கெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த கூட்டத்தில் அமைச்சரவை துணைக்குழு அறிவுறுத்தியவாறு மத்திய அரசுக்கு அனுப்பப்படவேண்டிய வெள்ள சேதார அறிக்கையைத் திருத்தி, திருத்திய அறிக்கையின்படி தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்கான நிதி ரூ.658 கோடியிலிருந்து ரூ.1,893 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வெள்ள நிலைமையை கண்காணிக்க மத்தியக் குழுத் தலைவரை நியமித்து, மத்திய அரசு ஆணைகள் வெளியிட்டதாகவும், இந்த குழு விரைவில் தமிழகத்திற்கு வந்து வருகை தந்து, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளதாக தெரிகிறது.

மேலும், தற்போது தமிழ்நாடு கடலோர பகுதியிலிருந்து 900 கி.மீ. தூரத்தில் உள்ள காற்றழுத்த மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் அமைச்சரவை துணைக்குழு கேட்டுக் கொண்டது. கூட்டத்தில் தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர ்" எ‌ன்ற ு கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments