Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கருணாநிதி டெல்லி பயணம்

Webdunia
புதன், 3 டிசம்பர் 2008 (17:26 IST)
இலங்கை‌த ் தமிழர்கள ் பிரச்சனைக்க ு தீர்வ ு கா ண வேண்டும ், அங்க ு போர ் நிறுத்தம ் உடனடியா க அமல்படுத்தப்ப ட வேண்டும ் எ ன ம‌த்‌தி ய அரச ு வ‌லியுறு‌த் த கோ‌ர ி ‌ பிரதம‌ர ை ச‌ந்‌தி‌ப்பத‌ற்கா க அனை‌த்து‌க்க‌ட்‌ச ி தலைவ‌ர்க‌ளுட‌ன ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌‌த ி இ‌ன்ற ு ‌ விமான‌ம ் மூல‌ம ் டெ‌ல்‌ல ி செ‌ன்றா‌‌ர ்.

இலங்கையில் போரை நிறுத்த இ‌ந்‌தி ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை‌த ் தொட‌‌ர்‌ந்த ு சட்டசபை கட்ச ி‌ த ் தலைவர்கள் கூட்டத்தில் தமிழக நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் முதலில் பிரதமரை சந்திப்பது என்றும், முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் 4ஆ‌ம ் தேதி டெல்லியில் பிரதமரை சந்தித்து இலங்க ை‌ யி‌ல ் போர் நிறுத்தத்தை வற்புறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அத‌ன்பட ி தமிழக நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌‌ள ் மத்திய அமை‌ச்ச‌ர ் டி.ஆர்.பாலு தலைமையில் பிரதமர் மன்மோகன்சிங்கை நே‌ற்ற ு ச‌ந்‌தி‌த்த ு மன ு ஒ‌ன்ற ை கொடு‌த்தன‌ர ். அ‌தி‌ல ், இலங்க ை‌ த ் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எ‌ன்று‌ம ் அங்கு போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று‌ம ் கோரிக்கைகள் ‌விடு‌த்‌திரு‌ந்தன‌ர ்.

இ‌ந் த மனுவ ை பெ‌ற்று‌க ் கொ‌ண் ட ‌ பிரதம‌ர ், ' இலங்க ை‌ த ் தமிழர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும ்' என்று அ‌ப்போத ு உறுதிய‌ளி‌த்தா‌ர ்.

இதை‌த் தொட‌ர்‌ந்த ு முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் நாளை பிரதமரை சந்திக்கிறார்கள்.

இதற்காக முதலமைச்சர் கருணாநிதி இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து `ஜெட் ஏர்வேஸ்' விமானம் மூலம் டெல்லி ச ெ‌ ன்றா‌ர ். அவருட‌ன ் திராவிடர் கழக தலைவர் வீரமணி, ஜனநாயக முற்போக்கு கழக தலைவர் ஜெகத்ரட்சகன் ஆ‌கியோரு‌ம் செ‌ன்றன‌ர்.

பா.ம.க. சா‌ர்‌பி‌ல் அ‌க்க‌ட்‌சி‌‌‌யி‌ன் ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், கோ.க.ம‌ணி, கா‌ங்‌கிர‌ஸ் சா‌ர்‌‌பி‌ல் சுதர்சனம், ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன், பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌கி‌ரு‌‌ஷ்ணசா‌மி, சம‌த்துவ ம‌க்க‌ள் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் ரா‌திகா சர‌த்குமா‌ர், எ‌ம்.‌ஜி.ஆ‌ர். கழக‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ஆர்.எம்.வீரப்பன், அப்துல் பாசித் (முஸ்லிம் லீக்), ல‌ட்‌சிய ‌தி.மு.க. தலைவ‌ர் ‌விஜய டி.ராஜேந்தர், புர‌ட்‌சி பாரத‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் பூவை ஜெகன்மூர்த்தி, பேராயர் எஸ்றா சற்குணம் (இந்திய சமூகநீதி இயக்கம்), ஐதர் அலி (தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம்), பி.வி.கதிரவன் (பார்வர்டு பிளாக்), திருப்பூர் சுல்தாப் (தமிழ் மாநில தேசிய லீக்) ஆகியோ‌ர் இன்று மாலை டெல்லி செ‌ன்றன‌ர்.

இக்குழுவினர் கருணாநிதி தலைமையில் நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசவுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments