Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ட்‌சியை வள‌ர்‌க்க ‌நினை‌க்‌‌கி‌றீ‌ர்களா? வரதராஜ‌னு‌க்கு கருணாநிதி கே‌ள்‌வி

Webdunia
புதன், 3 டிசம்பர் 2008 (16:08 IST)
வெ‌ள்ள ‌நிவாரண‌‌ம் கூடுதலாக வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று மக்களுக்காகப் போராட வேண்டுமென்று எண்ணுகிறார்களா? அல்லது அரசுக்கு நெருக்கடியை தர வேண்டுமென்று கருதுகிறார்களா? அல்லது மழையினால் மக்கள் படும் அவதியைப் பயன்படுத்திக் கொண்ட ு, கட்சியை வளர்க்க வேண்டுமென்று நினைக்கிறார்களா? எ‌ன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌‌ட்‌சி‌யி‌ன் மா‌‌நில செயல‌ர் வரதராஜனு‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், கடந்த நவம்பர் திங்கள் இறுதியில் தமிழகம் முழுவதும் சில நாட்கள் தொடர்ந்து பலத்த மழை பெய்து, அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று தெரிந்தவுடன ், 26.11.2008 அன்றே தலைமைச்செயலாளரை அழைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு தொடர்பு கொண்டு உடனடியாக நிவாரணப் பணிகளிலே ஈடுபட வேண்டுமென்றும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படவேண்டுமென்றும் கூறினேன். பல்வேறு பல்கலைக்கழகங்களின் சார்பில் நடைபெறவிருந்த தேர்வுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டன. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

அன்றைய தினம் நான் விடுத்த அறிக்கையில் மாவட்ட அமைச்சர்களும், நாடாளுமன் ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் வெள்ள நிவாரணப்பணிகளிலே உடனடியாக ஈடுபட வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்திட சென்னை மாநகரத்தில் மண்டலந்தோறும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முதுநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு அன்றே அனுப்பப்பட்டனர். 27ஆம் தேதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும ், வெள்ள நிவாரணப் பணிகள் தான் அவசரப் பொருளாகச் சேர்க்கப்பட்டு, அது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக நூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும ், மழையினால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கவும ், பகுதியாகவோ முழுவதுமாகவோ பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கவும் முடிவெடுக்கப்பட்டதோடு, அதற்கடுத்த நாளே உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலும், வெள்ளப்பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டு, அவர்களும் அவ்வாறே அந்தப்பகுதிகளுக்கு விரைந்து பணிகளை மேற்கொண்டனர்.

28 ஆம் தேதி விடியற்காலை 4 மணி அளவில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் எல்லாம் நானே நேரடியாக தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, அவர்களையெல்லாம் நிவாரணப்பணிகளிலே விரைந்து ஈடுபட வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.

நான் அவ்வாறு 4 மணி அளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட காரணத்தினால், திருவாரூர் மாவட்ட ஆட்சியருடன் மீண்டும் 6 மணி அளவிலே பேச முற்பட்டபோது, அவர் அம்மையப்பன் என்ற ஊரிலே வெள்ளப்பகுதிகளிலே நின்று கொண்டிருப்பதாக எனக்குச் செய்தி கிடைத்தது. தொலைபேசியிலே பேசியதோடு விட்டு விடாமல், அதே நாள் காலையில் சென்னை மாநகரிலே பெருமழையினால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம், காந்தி மண்டபம், சைதாப் பேட்டை, கீழ்ப்பாக்கம், பெரம்பூர் பகுதிகளுக்கு நானே நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் நிவாரணப் பணிகளில் விரைந்து ஈடுபடவேண்டுமென்று அதிகாரிகளை அறிவுறுத்தினேன்.

என்னைப் போலவே வட சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிதியமைச்சர் பேராசிரி யரு‌ம ், தென் சென்னையில் கோடம்பாக்கம், வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாம ிய ும், மத்திய சென்னையில் செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுத ியு‌ம் சென்று நிவாரணப் பணிகளிலே ஈடுபட்டனர். அதைப்போலவே மற்ற மாவட்ட அமைச்சர்கள் எல்லாம் தங்கள் தங்கள் மாவட்டங்களிலே இத்தகைய பணிகளிலே ஈடுபட்டுள்ளார்கள்.

வெள்ள நிவாரணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுத்திட அமைச்சரவை துணைக்குழு ஒன்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் தலைமையில் அமைத்து, அதன் முதல் கூட்டமும் நேற்றையதினம் நடைபெற்று, அந்தக் குழுவினரும் என்னிடம் நேற்று விவாதித்துள்ளார்கள்.

29 ஆம் தேதியன்று மீண்டும் தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலாளர், நிதித்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோரிடம் நிவாரணப்பணிகள் குறித்து நீண்ட நேரம் விவாதம் நடத்தினேன். அதன் விளைவாக, பகுதியாகவோ, முழுமையாகவோ பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 2000 ரூபாய் கொடுப் பதுட‌ன் பத்து கிலோ அரிசியும் வழங்க வேண்டுமென்று முடிவெடுத்து, அந்த அறிவிப்பும் செய்யப்பட்டு அவ்வாறே வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பகுதியாகவோ முழுமையாகவோ பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு மட்டும்தான் நிவாரணம் வழங்க வேண்டுமென்ற மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு கூடுதலா க, ஊரகப் பகுதிகளில் வெள்ளத்தால் சூழ்ந்த அனைத்து வீடுகளுக்கும் பாகுபாடின்றி தலா ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென்ற வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்ட ு, அவ்வாறே அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கிடவும்; நகர்ப்புற பகுதிகளிலும் மழை நீர ், வெள்ளம் புகுந்த அனைத்து வீடுகளுக்கும் வேறுபாடு கருதாமல் ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கிடவும்; சென்ன ை, சென்னை புறநகர் பகுதிகளிலேயும் மழை நீர ், வெள்ளம் புகுந்த அனைத்து வீடுகளுக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் வழங்கிடவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இவ்வாறு வெள்ள நிவாரணப் பணிகளிலே த‌ி.மு.க அரசு முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்த போதிலும், ஒரு சில கட்சிகள் அரசியல் ரீதியாக இதனை எடுத்துக் கொண்ட ு, இதை வைத்துக்கொண்டு மக்களைத் தூண்டி விட்டு, இந்த அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக்க முடியாதா என்ற நினைப்போடு செயல்படுகிறார்கள். எண்ணிப்பார்க்கவே முடியாத அளவிற்கு ஒரு தொகையைக் குறிப்பிட்ட ு, அந்தத் தொகையை அளிக்க வேண்டும், இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றெல்லாம் அறிக்கை விடுகிறார்கள்.

webdunia photoFILE
க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் ஆளு‌ம் மா‌நில‌த்‌தி‌ல் கோ‌ரி‌க்கை வை‌ப்பாரா வரதராஜ‌ன ்!

உதாரணத்திற்கு ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டுமென்றால், மழையினால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். மத்திய அரசே இந்த அளவிற்குத் தான் ஒரு இலட்ச ரூபாய் வழங்க வேண்டுமென்று நிர்ணயம் செய்துள்ளது. கம ்ய ூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் இதே அளவிற்குத்தான் வழங்கப்படுகிறது.

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் வரதராஜன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மழையினால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் அவர் நிறுத்தவில்லை. பாதிக்கப்பட்ட அனைத்து ஏழையெளிய குடும்பத்திற்கும், மீனவர்கள், கடலோர மக்களுக்கும் 30 கிலோ அரிசி, 10 லிட்டர் மண்ணெண்ணெய், 2 கிலோ சர்க்கரை, மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய ப ை, இதர செலவினங்களுக்கு தினசரி ரூ.50 வீதம் வழங்கிட வேண்டும். ந ெ‌ ற்பயிர் பாதிப்பிற்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். நிலத் தீர்வையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை நீட்டிக் கொண்டே போகிறார்.

மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் இதைவிட அதிகமாகச் சேர்த்து அறிக்கை விட யாராலும் முடியும். அரசின் நிதி நிலைமையையும் கவனத்தில் கொள்ள வேண்டுமல்லவா? கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் வரதராஜன் கோரிக்கை வைத்துள்ள அளவிற்கு உதவிகள் எல்லாம் செய்யப்படுகின்றனவா? தோழர் வரதராஜன் புள்ளி விவரம் கொடுப்பாரா? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் டிசம்பர் 10ஆ‌ம ் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள ே, யோசிக்க வேண்டாமா? தி.மு.க அரசு வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தனமாகவா நடந்து கொள்கிறது?

அவதியுறும் மக்களிடம் சென்று நீங்கள் அரசு கொடுக்கும் 2000 ரூபாயைப் பெற்றுக் கொள்ளாதீர்கள், 5000 ரூபாய் தர வேண்டுமென்று கேளுங்கள், போராடுங்கள் என்றெல்லாம் உசுப்பி தூண்டிவிடுகிறார்கள் என்றால், அவர்கள் உள்ள படியே மக்களுக்காகப் போராட வேண்டுமென்று எண்ணுகிறார்களா? அல்லது அரசுக்கு சிரமத்தையும் நெருக்கடியையும் தர வேண்டுமென்று கருதுகிறார்களா? அல்லது புயல் தொடர் மழையினால் மக்கள் படும் அவதியைப் பயன்படுத்திக் கொண்டு, கட்சியை வளர்க்க வேண்டுமென்று நினைக்கிறார்களா?

webdunia photoFILE
எ‌க்டேரு‌க்க ு ரூ.7,500 ந‌ஷ்டஈட ு!

இதுபோல மழை வெள்ளம் ஏற்படும் போது எந்த அளவிற்கு நிதி உதவி செய்ய வேண்டுமென்று மத்திய அரசு வரையறை செய்து ஆணையாகவே பிறப்பித்துள்ளது. நமது மாநிலத்தில் மத்திய அரசின் அறிவுரைக்கு மேலாகவே கூடுதலாக நிதி உதவிகள் செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால ், சிறு குறு விவசாயிகளுக்கு பாசன வசதியுள்ள இடங்களில் எக்டேர் ஒன்றுக்கு 4000 ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த முறை எக்டேர் ஒன்றுக்கு 7500 ரூபாய் அளவிற்கு நஷ்டஈடு வழங்கியிருக்கிறோம்.

இதே சலுகையை தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் பயிர் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கும் நீடித்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சலுகையைக் கூட மத்திய அரசின் விதிமுறையில் இரண்டு எக்டேர் அளவிற்கு மட்டுமே வழங்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்டதற்கு மாறாக, எத்தனை எக்டேர் இழப்புக்கு விவசாயிகள் ஆளானாலும், அத்தனை எக்டேர் நிலத்திற்கும் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாது, தி.மு.க. அரசு தான் முதல் முறையாக விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு பிரிமியம் தொகையில் ஐம்பது சதவிகிதத்தை மாநில அரசே ஏற்றுக் கொண்டு செலுத்தி வருகிறது. 2005-2006ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 967 விவசாயிகளே பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர் என்பதற்கு மாறாக 2006-2007ஆம் ஆண்டில் தி.மு. க ஆட்சியில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 444 விவசாயிகளும ், கடந்த 2007-2008ஆம் ஆண்டில் 5 லட்சத்து 57 ஆயிரத்து 481 விவசாயிகளும் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக 2007- 2008ஆம் ஆண்டுக்கு 279.32 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக விவசாயிகளுக்கு இந்தப் பயிர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ உதவி செய்வதில் தி.மு.க அரசு எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறது எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments