Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதிக்கு செம்மொழிச் செம்மல் விருது

Webdunia
புதன், 3 டிசம்பர் 2008 (10:26 IST)
முதலமைச்சர் கருணாநிதிக்கு டெல்லித் தமிழ்ச் சங்கம் சார்பில் செம்மொழிச் செம்மல் என்ற விருது நாளை டெ‌ல்‌லி‌யி‌ல் வழங்கப்படுகிறது.

webdunia photoFILE
ட ெல்லித் தமிழ்ச் சங்கம் சார்பில் நாளை புதுடெல்லி ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள சங்க வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நாட்டுவிழா, முத்தமிழ் தோரண வாயில் கால்கோள் விழா, செம்மொழிச் செம்மல் விருது வழங்கும் விழா நடைபெறு‌கிறத ு.

இந்த ‌விழா‌வில் முதலமைச்சர் கருணாநிதிக்கு செம்மொழிச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெற்ற பிறகு அவர் திருவள்ளுவர் சிலையை நா‌ட்டி சிறப்புரை ஆற்றுகிறார்.

டெல்லி முதலமை‌ச்ச‌ர் ஷீலா தீட்சித், மத்திய அமை‌ச்ச‌ர்க‌ள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

சங்கத் தலைவர் கிருஷ்ணமணி தலைமையில் நடக்கும் இந்த ‌‌விழா‌வி‌ல் சங்கப் பொதுச் செயலாளர் முகுந்தன் வரவேற்புரையு‌ம், இணைச் செயலாளர் ராகவன் நாயுடு நன்றியு‌ம் கூறுகிறார்.

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments