Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 5 பாலங்கள் கட்ட நபார்டு வ‌ங்‌கி ரூ.101 கோடி நிதியுதவி!

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (19:31 IST)
ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் உதவியுடன் தமிழகத்தில் 5 பாலங்கள் கட்ட நபார்டு வங்கி ரூ.101.61 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இவற்றுக்கான மொத்த செலவு ரூ.127.01 கோடியாகும்.

ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் கீழ் நபார்டு வங்கி ரூ.101.61 கோடியை இத்திட்டங்களுக்கு அளிக்கவுள்ளது. அண்மையில் நடைபெற்ற இந்த நிதியத்தின் திட்ட ஒப்புதல் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், கடலூர், நாமக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கட்டப்படவுள்ள இந்தப் பாலங்களால் 109 கிராமங்களுக்கு சாலை இணைப்பு கிடைக்கும். இதனா‌ல் சுமார் 3.5 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

2008-09 இல் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் வாயிலாக தமிழகத்திற்கு ரூ.905.42 கோடியை நபார்டு வங்கி அளித்துள்ளது. இதுவரை தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி ரூ.6,243.77 கோடியை எட்டியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

இன்று ஒரே நாளில் 1400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. அமெரிக்கா எடுத்த முடிவு காரணமா?

Show comments