Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜபாளைய‌ம் அ.இ.அ.‌தி.மு.க. எ‌ம்.எ‌ல்.ஏ. வெ‌ற்‌றி செ‌ல்லாது: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌‌தீ‌ர்‌ப்பு

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (14:44 IST)
ராஜபாளைய‌ம் தொகு‌தி அ.இ.அ.‌தி.மு.க. ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பெ‌ற்ற வெ‌ற்‌றி செ‌ல்லாது எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌‌ளி‌த்து‌ள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட தங்கமுத்து எ‌ன்பவ‌ர் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தா‌ர். அ‌தி‌ல், அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட குளோரி சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.

கடந்த 2 ஆண்டுகளாக நட‌ந்த இ‌ந்த மனு மீதான விசாரணை முடி‌ந்து இந்த வழக்கில் நீதிபதி நாகப்பன் இன்று தீர்ப்ப‌ளி‌த்தா‌ர்.

குளோரி சந்திரா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பது பள்ளி சான்றிதழ் மூலம் தெரிய வந்துள்ளது. கிறி‌ஸ்துவராக மாறி இருப்பதால் அவர் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமையை அனுபவிக்க முடியாது.

எனவே அவர் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது. மனுதாரர் தங்கமுத்துவுக்கு வழக்கு செலவுக்கான தொகை ரூ. 5 ஆயிரத்தை குளோரின் சந்திரா வழங்க வேண்டும் எ‌ன்று ‌நீ‌திப‌தி தீர்ப்ப‌ளி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments