" முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் வரும் 4ஆம் தேதி டெல்லியில், பிரதமரை சந்திக்க செல்லும் அனைத்துக்கட்சி குழுவில் பங்கேற்பேன்'' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல்.த ிருமாவளவன் தெரிவித்தார்.
webdunia photo
FILE
காஞ ்ச ிபுரம் தாலுகா அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட் டத்தை கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் முடித்து வைத்து ப ேசுகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனா? அல்லது தங்கபாலுவா? என்பது புரியவில்லை என்றார்.
டெல்லியில் பிரதமரை சந்திக்க செல்லும் அனைத்துக்கட்சி குழுவில் நான் பங்கேற்பேன் என்றும் இதில் மாற்றம் இல ்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன என்று தெரிவித்த திருமாவளவன், இந்த விடயத்தில் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றும் மெத்தன போக்கையே கடைபிடித்து வருகிறது என்றும் குற்றம்சாற்றினார்.