Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவு‌ச்‌சீ‌ட்டு பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: மதுரை அதிகாரி எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (17:33 IST)
உடனுக்குடன் கடவு‌ச்‌சீ‌ட்ட ு ( பாஸ்போர்ட ்) பெற்றுத் தருவதாக கூறு‌ம ், இடை‌த்தரக‌ர்களை ந‌ம்‌பி பொதும‌க்க‌ள் ஏமாறவே‌ண்டா‌ம் எ‌ன்று மதுரை கடவு‌ச்‌சீ‌ட்டு அ‌திகா‌ரி ஜோஸ் க ே. மாத்யூ எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதுதொட‌ர்பாக அவ‌ர் கூறுகை‌யி‌ல், " படிக்காத ஏழை விண்ணப்பதாரர்களிடமிருந்து ஏராளமான பணத்தைப் பறித்து கொண்டு இடைத்தரகர்கள் ஏமாற்றுவதாகத் தெரிய வந்துள்ளது. மதுரை கடவு‌ச்‌சீ‌ட்ட ு அலுவலகத்தின் முன்புள்ள சாலையில் உள்ள இடைத்தரர்களும், முகவர்களும் விண்ணப்பபடிவங்களை நிரப்புவதற்காக மட்டுமே ஏகப்பட்ட பணம் கேட்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், தேவைப்படாத ஆவணங்களையும், பொய்யான சான்றுகளை இணைக்கவும் இவர்கள் விண்ணப்பதாரர்களை அறிவுறுத்துகின்றனர்.

கடவு‌ச்‌சீ‌ட்ட ு பெறுவதற்கான விண்ணப்பங்களை அளிக்கும்போது, முந்தைய கடவு‌ச்‌சீ‌ட ்டி‌ன் விவரங்களையும், விண்ணப்பதாரர்கள் பற்றிய சில விவரங்களையும் மறைத்துவிடச் சொல்லியும் இந்த இடைத்தரகர்கள் கூறுவதாக தெரியவந்துள்ளது.

இதுபோன்ற முக்கிய தகவல்களை மறைத்தால், கடவு‌ச்‌சீ‌ட்ட ு பெறுவதில் தாமதம் ஏற்படுவதோடு, கடவு‌ச்‌சீ‌ட்ட ு விதிகளின் கீழ் அபராதம் விதிக்கவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நேரிடும். எனவே, பொதுமக்கள் பொய்யான வாக்குறுதிகளுடன் தம்மை அணுகும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம ்.

கடவு‌ச்‌சீ‌ட்ட ு அலுவலகத்திற்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டவும், உதவுவதற்காகவும் அந்த வளாகத்தின் உள்ளேயே ஓய்வு பெற்ற ராணுவத்தினர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தின் உதவியுடன் ஆன்லைனில் கடவு‌ச்‌சீ‌ட்ட ு விண்ணப்பங்களை அளிக்க முடியும். தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்கள், நகல் எடுக்கும் வசதி ஆகிய அனைத்தும் இந்த மையங்களில் கிடைக்கும். இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் உதவி மையத்தை பயன்படுத்த ி‌க் கொ‌ள்ளலா‌‌ம்.

கடவு‌ச்‌சீ‌ட்ட ு விண்ணப்பங்களை அளிப்பது தொடர்பான அனைத்து தகவல்களையும் www.passport.gov.in , www.passport.nic.in ஆகிய இணையதளங்களில் இரு‌ந்து ப‌ெ‌ற்று‌க் கொ‌ள்ளலாம‌ ்" எ‌ன்று ஜோஸ் க ே. மாத்யூ தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments