Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் அடு‌த்த 24 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு மழை!

Webdunia
ஞாயிறு, 30 நவம்பர் 2008 (05:54 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் அடு‌த்த 24 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு மழை தொடரு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்னை வானிலை ஆ‌ய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகை‌யி‌ல், தமிழகம் மற்றும் அதையொட்டி இருந்த கர்நாடகம் மற்றும் ராயல் சீமாவில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து கிழக்கு அரபிக்கடலில் வலுவிழந்த நிலையில் மெலிந்த காற்றழுத்த பகுதியாக நீடிக்கிறது. அதன் காரணமாக தற்காலிகமாக தமிழ்நாட்டில் மழை படிப்படியாக குறையும் எ‌ன்றா‌ர ்.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.

சென்னையை‌ப் பொறு‌த்தவரை வான‌ம் மேகமூ‌ட்ட‌த்துட‌ன் காண‌ப்படு‌ம். ஒரு சில இடங்களில் மழையோ அ‌ல்லது பல‌த்த மழையோ பெய்யும் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments