இந்தியா முழுவதும் ஊழலுக்கென்று ஒரு விருது கொடுக்க வேண்டுமென்றால், அது ஜெயலலிதாவிற்குத் தானே பொருந்தும் என்று கூறியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சராக இருந்த தயாநிதிமாறனை ராஜினாமா செய்யப் சொல்லி ஜெயலலிதா ஏன் அலறவில்லை என்றும் ராசாவை மட்டும் ராஜினாமா செய் என்று சொல்வதற்கு என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை:
மும்பையில் தீவிரவாதிகள் எட்டு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியும ், 6 இடங்களில் குண்டுகளை வெடித்தும் பயங்கரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சம்பவத்தைப்பற்ற ி?
நடைபெற்றுள்ள சம்பவங்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கும் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருக்கின்ற நேரத்தில் இந்தியாவிலே இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றிருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. இந்தச் சம்பவம் காரணமாக உயிர் நீத்த நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, நிவாரணப் பணிகளிலே மராட்டிய மாநில அரசும், மத்திய அரசும் விரைந்து ஈடுபடும் என்று நம்புகின்றேன்.
" பிரதமரைச் சந்தித்த ு, மத்திய அமைச்சர் ராசாவைக் காப்பாற்றவே முதல்வர் டெல்லி பயணம்'' என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார ே?
" ராசாவை மீட்பதற்காகத்தான் கருணாநிதி இப்போது டெல்லிக்குப் போகிறார்'' என்று கம்பளத்தில் வடிகட்டிய ஒரு பொய்யை அம்பலத்தில் சொல்லி ஆட்டம் போடும் அம்மையார் ஜெயாவுக்கு சில கேள்விகள்:
ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில ், ஏலம் விடுகிற முறையைத் தவிர்த்து; முதலில் விண்ணப்பிப்பவருக்கு வழங்குவது என்ற விதிமுறையை ஏற்படுத்தியது யார ்? அன்றைய பா.ஜ.க. அமைச்சர் அருண் ஷோரி அல்லவா?
அதே விதிமுற ை, அடுத்து அந்தப் பொறுப்பில் இருந்த அமைச்சர் தயாநிதிமாறனாலும் கடைப்பிடிக்கப்பட்டதா அல்லவ ா? அவரை ராஜினாமா செய்யச் சொல்லி ஜெயலலிதா ஏன் அலறவில்ல ை? அறிக்கை விடவில்ல ை? அவர்கள் மீதெல்லாம் "ராஜினாமா செய்'' என்ற கணையைப் பொழியாமல் ராசா மீது மட்டும் கண்மூடித் தாக்குதல் நடத்துவதற்குக் காரணம் என்ன?
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் என்று ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே?
" தான் திருடி, பிறரை நம்பாள்'' என்பது கிராமப்புற பழமொழி. வருமானத்தை விட அதிகமாக 64 கோடி ரூபாய்க்கு மேல் பதவியிலே இருந்தபோது சொத்து சேர்த்து அதற்கான வழக்கு தமிழக நீதிமன்றங்களிலே கூட அல்ல, பெங்களூர் நீதிமன்றம் வரை சென்று அங்கே பல ஆண்டுக் காலமாக வாய்தா வாங்கி, அந்த இடைவெளியைக் காரணமாகக் கொண்டு ஜெயலலிதா அறிக்கை விடுத்தும், தொண்டர்களை ஊருக்கு ஊர் ஆர்ப்பாட்டம் நடத்தச்சொல்லியும் காலம் கடத்தி வருகிறார் அல்லவ ா? இந்தியா முழுவதும் ஊழலுக் கென்று ஒரு விருது கொடுக்க வேண்டுமென்றால், அது ஜெயலலிதாவிற்குத் தானே பொருந்தும்.
எத்தனை விதமான ஊழல் அவருடைய ஆட்சிக் காலத்தில்! அவரா மத்திய அமைச்சர் ராசாவைக் காப்பாற்ற நான் டெல்லி செல்கிறேன் என்றும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மிகப் பெரிய ஊழல் என்றும் அறிக்கை விடுவது? நான் பிரதமரைச் சந்திக்கச் செல்லும்போது தனியாகச் செல்லப்போவதில்லையே? அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு தானே போகப்போகிறேன்.
அப்போது நான் பிரதமரிடம் ராசாவிற்காக வக்காலத்து வாங்கிப் பேசுகிறேனா? அல்லது இலங்கைத் தமிழர்களுக்காக பேசுகிறேன ா? என்பதைத் தெரிந்து கொள்ளலாமே!
இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக எந்தெந்த கட்சிகள் நிதி அளித்தன என்ற பட்டியலில் இலங்கைத் தமிழர்களுக்காக நான் தான் என்று எப்போதும் குரல் கொடுக்கும் ம.தி.மு.க. சார்பிலோ, அ.தி.மு.க. சார்பிலோ எந்த நிதியும் அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லைய ே?
ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது தமிழகத்திலே வரலாறு காணாத அளவிற்கு சுனாமி ஏற்பட்டபோது, அதற்காக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினை நேரில் அனுப்பி நிவாரண நிதியை வழங்கச் செய்தேன். அது தி.மு.க.வின் பண்பாடு.
ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியிலே இருக்கின்றது என்ற காரணத்தால் அ.தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ இலங்கைத் தமிழர் நிவாரண நிதி வழங்கவில்லை. இது அவர்களுடைய பண்பாடு.
ஆனால் இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் யார் என்பது உலகத் தமிழர்களுக்கும் தெரியும், இலங்கைத் தமிழர்களுக்கும் தெரியும்.
பெட்ரோல் விலையைக் குறைக்க மறுப்பதா என்று கேட்டு சி.பி.எம்., சி.பி.ஐ., பார்வர்டு பிளாக் கட்சிகள் டிசம்பர் 2ஆம் தேதியன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறார்களே?
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப் போவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தொடர்ந்து சொல்லி வருகிறார். அதற்கான கோப்பினை அமைச்சரவையின் அனுமதிக்கு அனுப்புவதாக அந்தத் துறையின் செயலாளர் ஆர்.எஸ். பாண்டே அறிவித்திருக்கிறார். இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் இந்தக் கட்சிகள் போராட்டம் நடத்தப்போவதாக சொல்லி யிருக்கிறார் கள்.