Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைப் பிரச்சனையை பிரணாப் மிக நன்றாக கையாண்டார்: ரனி்ல் விக்கிரமசிங்க பாராட்டு!

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2008 (16:15 IST)
இலங்கை இனப் பிரச்சனையில் சமீபத்தில் எழுந்த சிக்கலை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார் என்று சிறிலங்க முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க பாராட்டினார்.

தலைநகர் டெல்லிக்கு வந்து அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த ரனில் விக்கிரமசிங்க இலங்கைப் பிரச்சனை குறித்துப் பேசினார். பாரதிய ஜனதா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.

தனது டெல்லிப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை வந்த ரனில், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை இனப் பிரச்சனையில் மிகச் சமீபத்தில் எழுந்த சிக்கலை மிகச் சிறப்பாக பிரணாப் முகர்ஜி கையாண்டார் என்று கூறினார்.

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை நடத்திவரும் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ரனில், 2005ஆம் ஆண்டிலேயே சிறிலங்காவும், இந்தியாவும் உடன்பாடு செய்துகொண்டிருந்தால் இன்று நடுக்கடலில் சிறிலங்க கடற்படையுடன் அடுக்கடி ஏற்படும் ‘மோதல்கள ை’ தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

“இப்பிரச்சனையில் தான் இதற்கு மேல் கருத்துகூறுவது வேறொரு நாட்டின் உள் நாட்டுப் பிரச்சனையில் கருத்து கூறுவதாகிவிடும ்” என்று கூறிய ரனில், இலங்கையில் வன்னிப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை, தற்காலிக வசிப்பிடம் ஆகியன அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இலங்கை இனப் பிரச்சனைக்கு முடிவு கட்ட தமிழர் தேசிய கட்சிகளும், முஸ்லீம் கட்சிகளும் இணைந்து சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று ரனில் யோசனை கூறியுள்ளார்.

ரனில் விக்கிரமசிங்க சென்னையில் இருந்து திருச்சி சென்று அங்கிருந்து திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டுவிட்டு, சாலை வழியாக மதுரை சென்று அங்கு மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு இன்று இரவு கொழும்பு செல்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments