Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக மீனவர்களை ‌மீ‌ட்க பிரதமருக்கு தங்கபாலு கடிதம்!

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2008 (13:56 IST)
சி‌றில‌ங்க கட‌ற்படை‌‌யினரா‌ல் ‌சிறை‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட, புது‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌ம் ஜகதா‌ப் ப‌ட்டண‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்களை ‌விடு‌வி‌க்க உ‌ரிய நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்கு, த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் கே.‌வி. த‌ங்கபாலு கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், " தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலைக்கும், தாக்குதலுக்கும் ஆளாகி அல்லல்பட்டு வரும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று கடந்த ஜுலை மாதம் எனது தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்தோம்.

அப்போது இலங்கையில் நடைபெறப் போகும் சார்க் மாநாட்டின் போது இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் இதுகுறித்து நேரில் பேசி நடவடிக்கை எடுப்பேன ் என்று பிரதமர் உறுதியளித்தார்.

அதன்படி தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது. இருந்த போதிலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பிடிபட்டுச் சென்ற நிகழ்வ ு நடைபெற்றுள்ளது.

எனவே அது தொடர்பாக தலையிட்டு மீனவர்களும், அவர்களது படகுகள் மற்றும் உடமைகளும் விடுவிக்கப்பட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கும், அயலுறவு‌த்து துறை அமை‌ச்சரு‌க்கு‌ம் கடிதங்கள் எழுதியுள்ளேன ்" எ‌ன்று த‌ங்கபாலு தெ‌ரிவி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments