இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில ், " விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் பிரிவான 'இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசற ை' என்னும் புதியதோர் அமைப்பின் தொடக்க விழா, தமிழீழ அங்கீகார மாநாடு ஆகிய 2 நிகழ்ச்சிகளும் எதிர்வரும் 26ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த நிகழ்வுகள் டிசம்பர் 1ஆம் தேதியன்று சென்னை தீவுத்திடலில் நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே, இயக்கத் தோழர்களும், முன்னணி செயல்வீரர்களும், பொதுமக்களும் சென்ன ை க்கு அணி திரண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விளம்பரங்கள், துண்டறிக்கை மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றில் `தி ச.-1 சென்னை' என திருத்தம் செய்து பிரசாரம் செய்ய வேண்டும் எனவும், இந்திய அரசின் போக்கையே மடைமாற்றம் செய்யும் அளவில் அம்மாநாட்டுக்கு பெருந்திரளாய் மக்களைத் திரட்ட வேண்டும ்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.