Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்வெட்டை கண்டித்து ஓமலூரில் ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 நவம்பர் 2008 (15:22 IST)
மின்வெட்டை கண்டித்து ஓமலூ‌ரி‌ல் வரு‌ம் 20ஆ‌ம் தே‌தி அ.இ. அ.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் க‌‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் பொதுச் செயலர் ஜெயலலிதா அற‌ி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது கு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில ், " சேலம் புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தில், வீரபாண்டி, ஓமலூர், தாரமங்கலம், மேட்டூர் மற்றும் எடப்பாடி ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் கடுமையான மின்வெட்டு காரணமாக, அனைத்துப் பொருட்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள் ளது.

விசைத்தறித் தொழிலும், வேளாண்மைத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பெரும்பாலான சிறுதொழில்கள் மூடப்படும் அபாய நிலைக்கு வந்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறனர்.

இதன் விளைவாக விவசாயத் தொழிலாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதை கண்டித்து 20 ஆ‌ம ் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மண ி யளவில், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும ்" என‌்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments