Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மீது இல.கணேசன் குற்றச்சாட்டு!

Webdunia
ஞாயிறு, 9 நவம்பர் 2008 (05:03 IST)
இலங்கைப் பிரச்னையில் முதல்வர் கருணாநிதிக்கு தினமும் ஒரு நிலைப்பாடு உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பிற கட்சிகள் குரல் கொடுக்கும்போது தனது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற அடிப்படையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி எம்பி-க்கள் ராஜிநாமா என முதல்வர் கருணாநிதி எச்சரித்தார்.

ஆனால், இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டு வருவதாகவும், அரசியல் நோக்கத்துக்காக குரல் கொடுப்பதும் பின்னர் அதற்கு எதிர்மறையான நிலைப்பாடு எடுப்பதும் கருணாதிக்கு வழக்கமாக உள்ளதாகவும் இல. கணேசன் குறிப்பிட்டார்.

இப்போதுகூட "போர் நிறுத்தம் புலிகளுக்கும் பொருந்தும்' என முதல்வர் கூறியிருப்பதாகவும் இல. கணேசன் கூறினார்.

" ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதாக மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து விலகி விட்டு, தூய்மையானவர் என அவர் நிரூபிக்க வேண்டும் என்று இல. அவர் கேட்டுக் கொண்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments