Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஏஎஸ் அதிகாரிகள் மீண்டும் இடமாற்றம்!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (22:59 IST)
தமிழக அரசு அண்மையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக ஆசிஷ் சாட்டர்ஜியை நியமித்து உத்தரவை ரத்து செய்திருப்பதோடு, வேறு சில மாவட்டங்களுக்கும் புதிய ஆட்சித் தலைவர்களை நியமித்துள்ளது.

சென்னையில் இன்று தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளார்.

அதன்படி திருவள்ளூர், வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்களை நியமித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் ராஜேந்திரகுமார் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

நுகர்பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் ஆணையர் ஜி. சுந்தரமூர்த்தி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியர் (செங்கல்பட்டு) சி.ராஜேந்திரன், வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்படுகிறார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக ஆசிஷ் சாட்டர்ஜியை இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பூஜா குல்கர்னியை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீபதி அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பங்கஜ்குமாரை நியமித்து வெளியிடப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (பணிகள்) ஆசிஷ் சாட்டர்ஜி, ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும் (மேம்பாடு), மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட அதிகாரி பூஜா குல்கர்னி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பங்கஜ்குமார் பன்சால் ஆகியோர் தொடர்ந்து அதே பொறுப்பிலும் நீடிப்பார்கள் என்று ஸ்ரீபதி குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments