Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் அரசு மருத்துவமனையில் துப்பாக்கி சூடு!

Webdunia
வியாழன், 6 நவம்பர் 2008 (11:44 IST)
கொலை வழ‌க்‌கி‌ல் ஆயு‌ள் த‌ண்டனை பெ‌ற்று மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌ம் கை‌தி ஒருவரை ம‌ர்ம‌க் கு‌ம்ப‌ல் ஒ‌ன்று அ‌ரிவாளா‌ல் வெ‌ட்டியது. இதை‌த் தொட‌ர்‌ந்து பாதுகா‌ப்பு‌க்கு ‌நி‌ன்று காவ‌ல‌ர் ஒருவ‌ர் அ‌ந்த கு‌ம்ப‌ல் ‌மீது து‌ப்பா‌க்‌கியா‌ல் சுட்டதா‌ல் அ‌ங்கு பெ‌ரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது.

2002 ஆம் ஆண்டு விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் புஷ்பராஜ் கொலை செய்யப்பட்ட வழ‌க்‌கி‌ல் ஆயு‌ள் த‌ண்டனை பெ‌ற்று வரு‌ம் இருசப்பன் என்ப வ‌ர் உட‌ல் நல‌க்குறைவா‌ல் கடலூர் அரசு மரு‌‌த்துவமனை‌யி‌ல் பாதுகா‌ப்புட‌ன் சிகிச்சை பெற்று வரு‌கிறா‌ர்.

இன்று கால ை‌யி‌ல் அ‌ந்த மரு‌த்துவமனை‌யி‌ல் புகு‌ந்த 4 பேர் கொண்ட கும்பல ், பாதுகா‌ப்பு‌க்கு ‌நி‌ன்ற காவல‌ர் செந்தில்குமார் மீது மிளகாய் பொடியை தூவி விட்டு அங்கு சிகிச்சை பெற ்று வ‌ந்த இருசப்பனை அரிவாளால் சரமாரியாக வெட ்டியத ு. இதில் அவ ரது க ை, கால், தலையில் பல‌த்த வெட்டு விழுந்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து சுதா‌ரி‌த்து‌க் கொ‌ண்ட காவல‌ர் செந்தில்குமார ், கை‌யி‌‌ல் வைத்திருந்த துப்பாக்கியால் மர்ம கும்பலை நோக்கி சுட்டார். ஆனால் குண்டு அ‌ந்த மர்ம கும்பல் மீது படவில்லை. இதையடு‌த்து அ‌ந்த கும்பல் அ‌ங்‌கிரு‌ந்து தப்பி ஓடி விட்டது.

இது ப‌ற்‌றி தகவல் அ‌றி‌ந் ததும் கடலூர் மாவ‌ட்ட க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் பிரதீப்குமார ், மரு‌த்துவமனை‌‌க்கு ‌விரை‌ந்து வ‌ந்து நேரடி ‌விசாரணை நட‌த்‌‌தினா‌ர்.

இந்த சம்பவத்தால் கடலூர் அரசு மரு‌த்துவமனை‌ பெறு‌ம் பரபரப்ப ுட‌ன் காண‌ப்ப‌ட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments