Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தியமூர்த்தி பவனை இடிப்பதா? தங்கபாலுக்கு இளங்கோவன் கண்டனம்!

Webdunia
வியாழன், 6 நவம்பர் 2008 (00:36 IST)
வாஸ்து சரியில்லை என்று கூறி தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனின் ஒருபகுதியை இடித்திருப்பதை மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் செய்திருக்கிறார்.

இதற்காக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ. தங்கபாலுவுக்கு எதிர ா அக காங்கிரஸ் மேலிடத்தில் புகார் செய்வேன் என்று தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இளங்கோவன் கூறினார்.

சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவன் காமராஜரால் கட்டப்பட்ட, காங்கிரசிற்கு சொந்தமான கட்டிடம் என்று கூறிய இளங்கோவன், வாஸ்து சரியில்லை என்று கூறி அந்த கட்டிடத்தின் ஒருபகுதியை இடித்து இருப்பதாக தெரிகிறது என்றார்.

அந்த கட்டிடத்தை இடித்தது தங்கபாலு செய்த மிகப்பெரிய தவறு. இதற்கு முன்பு எத்தனையோ பேர் தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்யாத ஒன்றை தங்கபாலு செய்து இருப்பதாகக் குறைகூறியுள்ள இளங்கோவன், இந்த செயலை செய்வதற்கு முன்பு மேலிடத்தில் தங்கபாலு அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்றார்.

ஆனால் எந்தவித அனுமதியும் பெறாமல் தங்கபாலு இப்படி நடந்து கொண்டிருப்பது பற்றி மேலிடத்தில் புகார் செய்வேன் என்றார் அவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments