Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான், அமீரை விடுதலை செய்ய வேண்டும்-சரத்குமார்!

Webdunia
புதன், 29 அக்டோபர் 2008 (16:16 IST)
இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி, கைது செய்யப்பட்டுள்ள திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமான், அமீர் ஆகியோரை சரத்குமார் இன்றுகாலை சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறையில் உள்ள சீமான், அமீர் இருவரையும் நண்பர்கள் என்ற அடிப்படையிலும், கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் தாம் சென்று சந்தித்ததாகக் குறிப்பிட்டார்.

இயக்குனர்கள், நடிகர்களுக்கு மொழிப்பற்று, இன உணர்வு இருக்க வேண்டும். ஆனால் பேசும்போது உணர்ச்சி வசப்படக் கூடாது என்று சரத் குமார் கூறினார்.

சீமான், அமீர் இருவரையும் அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், ஒவ்வொரு நபரையும் கைது செய்ய வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments