Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபி வனப்பகுதியில் குட்டி யானை சாவு!

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (15:26 IST)
கோபி அருகே வனப்பகுதியில் நோய்வாய்பட்டு குட்டி யானை ஒன்று இறந்தது.

கோபி அருகே உள்ளது டி.என். பாளையம் வனசரகம். இதற்குட்பட்டது பங்களாபுதூர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் சுமார் இரண்டு வயது மதிக்கதக்க ஒரு ஆண் யானைக்குட்டி நோய்வாய்பட்டு நடக்கமுடியாமல் படுத்து‌க் கிடந்தது.

தகவல் தெரிந்ததும் சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி இராம சுப்பிரமணியம் மற்றும் ரேஞ்சர் மணி (பொறுப்பு) ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குட்டி யானைக்கு சிகிச்சை மேற்கொண்டனர்.

ஆண் யானை ஒன்று தன் தந்தத்தால் குத்தியதில் ஏற்பட்ட காயத்தில் ஏற்பட்ட புழு தொந்தராவால் அந்த யானை‌க் குட்டி பாதிக்கப்பட்டது தெரியவந்தது. பின் அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்த குட்டி யானை சிகிச்சை பலனின்றி இறந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments