Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழினப் படுகொலையைக் கண்டித்து 31இல் கடையடைப்பு: வணிகர் சங்கம்!

Webdunia
ஞாயிறு, 26 அக்டோபர் 2008 (03:53 IST)
இலங்கையில் நடைபெறும் தமிழினப் படுகொலையைக் கண்டித்து தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி முழு கடையடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சிறீலங்கா அரசின் ஈவு இரக்கமற்ற இனப் படுகொலையைக் கண்டித்தும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரியும் இந்தக் கடையடைப்பு நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தமிழ் மக்களின் உயிரோடும ், உணர்வோடும் தொடர்புடைய போராட்டம் என்பதால் இந்தக் கடையடைப்பு போராட்டத்தில் எந்த வர்த்தகப் பிரிவுக்கும் விதிவிலக்கு வழங்கப்படாது. மிகச் சிறிய டீக்கடை முதல் மிகப்பெரிய நகைக்கடைகள் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும் அக்டோபர் 31ஆம் தேதி அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments