Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மளிகை பாக்கெட்டுகள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்க வேண்டும்: எ.வ.வேலு!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (18:13 IST)
செ‌ன்னை: ''மா‌‌‌‌னிய ‌விலை ம‌ளிகை பா‌க்கெ‌ட்டுகளை மக‌ளி‌ர் சுயஉத‌வி‌க்குழு‌க்க‌ள் மூல‌ம் தயா‌ரி‌க்க வே‌ண்டு‌ம்'' எ‌ன்று உணவு‌த்துறை அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

தம ி‌‌‌ழக‌த்‌தி‌ல் உ‌ள்ள அனைத்து கிடங்குகளின் அரிசி இருப்பு நிலைமையினையும், சிறப்பு பொது விநியோகத் திட்டம் மற்றும் மானிய விலையில் மளிகைப் பொருள் விநியோகம் தொடர்பாகவும் ஆ‌ய்வு ச ெ‌ய்ய மாநில அளவிலான மண்டல மேலாளர்களின் ஆ‌ய்வு‌க ் கூட்டத்தை உணவு அமைச்சர் எ.வ. வேலு இன்று (21 ஆ‌ம் தே‌த ி) சென்னை கோபாலபுரத்திலுள்ள தம ி‌ழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகக் கூட்ட அரங்கில் தொடங்கி வைத்த ா‌ர்.

இ‌ந்த ஆ‌ய்வு கூ‌ட்ட‌‌த்தை தொட‌ங்‌கி வை‌த்து அமை‌ச்ச‌ர் எ.வ. வேலு பேசுகை‌யி‌ல், கிடங்குகளின் தேவைக்கேற்ப அனைத்து பொருட்களையும் இருப்பில் வைக்க வேண்டும். தற்போது வடகிழக்கு பருவ மழை ப ெ‌ய்த ு வருவதால், சேமித்து வைக்கப்படும் உணவு தானியங்கள் மழையினால் பாதிப்படையாமல் பாதுகாக்க வேண்டியது மண்டல மேலாளர்களின் கடமையாகும். தம ி‌ழ்நா‌ட்ட ின் உணவுப்பொருள் இருப்பு நிலைமை நல்ல நிலையில் இருக்கிறது. மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளையும் சமாளிக்கத் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளத ு.

அத்தியாவசியப் பொருட்கள் லாரிகளில் அனுப்பும்போது தார்பாலின் கொண்டு மூட வேண்டும். தேவையான தார்பாலின் இருப்பு வைக்க வேண்டும். இவ்வாறு மூடப்பட்டு அனுப்பப்படும் லாரிகளில் ரேஷன் பொருட்கள் மற்றும் வழித்தடம் ஆகிய போர்டுகள் பெ ாறுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி ச ெ‌ய்ய‌ப்ப‌ட்ட பின்னரே லாரிகளை கிடங்குகளை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். அரவை முகவர்களின் அரிசி ஆலைகளையும், நவீன அரிசி ஆலைகளையும் மண்டல மேலாளர்கள் நேரில் சென்று ஆ‌ய்வு செ‌ய் ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் நிர்ணயித்துள்ள கால அட்டவணை மற்றும் வழித்தடப்படி பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதை மண்டல மேலாளர்கள் உறுதி செ‌ய்ய வேண்டும்.

மண்டல மேலாளர்கள் ஒவ்வொரு மாதம ு‌ம் நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று கிடங்குகளிலிருந்து அனுப்பப்பட்ட அதே பொருட்கள் தான் நியாயவிலைக் கடைகளில் விற்பனை ச ெ‌ய்ய‌ப்படு‌கிறதா என்பதை ஆ‌ய்வு செ‌ய்ய வேண்டும். பொது மக்கள் பச்சை அரிசி,
புழுங்கல் அரிசி என்று எதை கேட்டாலும் அதனை வழங்க போதுமான அளவுக்கு இருப்பு வைக்க வேண்டும். லாரியுடன் நகர்வு சம்பந்தப்பட்ட முதன்மை கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் உடன் வருகிறார்களா என்பதை உறுதி செ‌ய ்து அவர்களுடைய விவரங்களை கிடங்கினில் பதிவு ச ெ‌ய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருட்கள் அனைத்து கிடங்குகளிலும் தேவையான அளவு இருப்பு வைக்க மண்டல மேலாளர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ம ேலும், தனியார் அரவை அரிசி ஆலைகளிடமிருந்து பெறப்படும் அரிசியின் தரம், ஈரப்பதம், பாலீஷ் ஆகியவற்றை கண்காணித்து நல்ல அரிசியை மட்டுமே திரும்ப பெற வேண்டும். குறுவை நெல் அதிக ஈரபதத்துடன் கொள்முதல் ச ெ‌ய்ய‌ப ்படுவதால் உடனடியாக அரவை முகவர்களுக்கு அனுப்பி உடனுக்குடன் அரவை ச ெ‌ய்து அரிசி பெறப்பட வேண்டும்.

விவசாயிகளின் நலன் கருதி டி.கே.எ‌ம் 9 ரக நெல்லை கொள்முதல் ச ெ‌ய்ய முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இந்நெல்லை உடனுக்குடன் அரவை முகவர்களுக்கு அனுப்ப வேண்டும். பாக்கெட்டுகள் தயார் ச ெ‌ய்ய மகளிர் சுய உதவிக் குழுக்களை பயன்படுத்த வேண்டும். மானிய விலை மளிகைப் பொருளினை குடும்ப அட்டைதாரர்கள் மாதத்திற்கு ஒரு முறை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் எ‌ன்று அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments