Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஊர்வசிக்கு விவாகரத்து வழ‌‌ங்‌கியது ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2008 (14:56 IST)
சென்ன ை : கணவருட‌‌ன ் ஏ‌ற்ப‌ட் ட கரு‌‌த்த ு வேறுபாட ு காரணமா க ‌ விவாகர‌த்த ு கே‌ட் ட ‌ பிரப ல த‌மி‌ழ ் நடிக ை ஊ‌ர்வ‌சி‌க்க ு, செ‌ன்ன ை குடு‌ம்பந ல ‌ நீ‌திம‌ன்ற‌‌ம ் இ‌ன்ற ு ‌ விவாகர‌த்த ு வழ‌ங்‌கியத ு.

webdunia photoFILE
த‌மி‌ழி‌‌ல ் ‌ பிரப ல நடிகையா க இரு‌ந் த நடிகை ஊர்வச ி, த‌ன்ன ை கணவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி சென்னை குடும்பநல ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் கட‌ந்த மே மாத‌ம் வழக்கு தொடர்ந்தார். இ‌ந்‌த வழ‌க்கு ‌விசாரணை நீதிபதி கலையரசன் முன்பு நடந்து வந்தது.

கடந்த மாத விசாரணையின் போது இருவரையும் சமரசப்படுத்தும் வகையில் இவ்வழக்கு சமரச மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சுமார் 3 மணி நேரம் சமரச மைய உறுப்பினர்கள் முன்பு நட‌ந்த பேச்சுவார்த்தை‌யி‌ல் சமரசம் ஏற்படவில்லை.

இதையடுத்து, இருவரும் நீதிபதி முன்பு ஆஜராகி பிரிந்து செல்ல முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். இதன்பின் கடந்த வெள்ளிக்கிழமை இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரிந்த செல்ல முடிவு செய்துள்ளதாக கூறி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி கலையரசன் முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது ஊர்வசியும், அவரது கணவ‌‌ர் மனோஜ் கே.ஜெயனும் ஆஜராகவில்லை.

ஆனாலும் நீதிபதி இருவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரிந்த செல்ல முடிவு செய்திருப்பதால் அவர்களுக்கு விவாகரத்து வழங்குவதாக உத்தரவிட்டார்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments