2008-2009 ம் அரவைப்பருவத்தில் 9 விழுக்காட ு சர்க்கரை கட்டுமானமுள்ள ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு ரூ.811.80 எனக் குறைந்தபட்ச விலையாக நிர்ணயம் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளின் கோரிக்கையினையேற்று, தி.மு.க அரசு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச விலையை விட கூடுதலாக ரூ.238.20 உயர்த்தி 9 விழுக்காட ு சர்க்கரை கட்டுமானமுள்ள ஒரு டன் கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.1,050 என்று நிர்ணயம் செய்து அறிவ ி த்துள்ளது.
இந்த விலை உயர்வு 1.10.2008 முதல் தொடங்கி உள்ள நடப்புக் கரும்பு ஆண்டில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கும் பொருந்துமாறு முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும ் மேலும் 9 விழுக்காட ு சர்க்கரைக் கட்டுமானத்துக்கும் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 0.1 விழுக்காட ு சர்க்கரைக் கட்டுமானத்துக்கும் டன் ஒன்றுக்கு ரூ.9 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் தமிழ க அரச ு அறிவித்துள்ளத ு.