'' இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்திட இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி நாளை சென்னையில் நடைபெற உள்ள மனி த ச ் சங்கிலி போராட்டத்தில் புதிய தமிழகம் பங்கேற்கும ்'' என்ற ு அக்கட்சியின ் தலைவர ் டாக்டர ் கிருஷ்ணசாம ி அறிவித்துள்ளார ்.
webdunia photo
FILE
இத ு தொடர்பா க அவர ் இன்ற ு வெளியிட்டுள்ள அறிக்கையில ், இலங்கையில் மாண்டு மடியும் தமிழினத்தை காப்பாற்ற இப்பொழுது தமிழகம் போர்க்கோலம் கொண்டுள்ளது என்றும ் ஒரு கட்டத்தில் சுய நிர்ணய உரிமைக்காக போராட்டத்தை துவங்கிய தமிழன் இன்று தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என்றும ் கூறியுள்ளார ்.
இலங்கை வாழ் பூர்வீக மற்றும் மலையக தமிழர்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்க சிங்கள பேரினவாத ராஜபக்சே அரசு மறுக்கிறது என்ற ு குற்றம்சாற்றியுள் ள கிருஷ்ணசாம ி, இலங்கையில் கடைசி தமிழனும் அழிக்கப்பட்டு விடுவானோ என்ற ஆதங்கம் நம்மையெல்லாம் வாட்டி வதைக்கிறது என்ற ு வேதன ை தெரிவித்துள்ளார ்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்திட இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி நாளை சென்னையில் நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்தில் புதிய தமிழகம் பங்கேற்கும் என்ற ு தெரிவித்துள் ள கிருஷ்ணசாம ி, இந்த போராட்டத்தில் கட்சியின் தொண்டர்கள், கொடி மற்றும் பதாகைகளுடன் அண்ணா சாலையில் உள்ள சிலை அருகே மாலை 3 மணிக்கு திரளாக கூட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார ்.