Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன விலை கொடுத்தேனும் இன‌ப்படுகொலையை தடுப்போம்: கருணாநிதி!

Webdunia
சனி, 18 அக்டோபர் 2008 (15:47 IST)
'' தமிழ் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டிருக்கிறத ு, எண்ணி எண்ணி ஏங்குகிறேன ், பெருமூச்சு விடுகிறேன ், மனம் ஒரு நிலையில் இல்ல ை, உறங்க முடியாமல் தவிக்கிறேன ், இனம் காப்போம்! இனமானம் காப்போம்! இனப்படுகொலையை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம்!'' எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌தி அறைகூவ‌ல் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், '' அரசின் சார்பில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று அந்தக்கூட்டத்திலே ஆறு தீர்மானங்கள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 15-10-2008 அன்று இந்தியப் பிரதமருக்கும், வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கும் என்னுடைய கடிதத்தோடு இணைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதே நாளில் டெல்லியில் பிரதமரைச் சந்தித்த செய்தியாளர்கள் இலங்கை பிரச்சனை பற்றியும், நாம் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றியும் கருத்து கேட்டுள்ளார்கள். அப்போது பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், "இலங்கையில் நிலவும் சூழ்நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அங்கு தீவிரமாகி வரும் போரினால் அப்பாவி பொது மக்களுக்கு ஏற்படும் இழப்புகள ், இடம் பெயர்ந்து அகதிகளாக செல்பவர்கள் அதிகரித்து வருவதும் வேதனை அளிக்கிறது. இலங்கை பிரச்சனைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. சமரச பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று தான் நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம்.

இலங்கையின் ஒற்றும ை, ஒருமைப்பாட்டை மதிக்கும் வகையிலும், அதே நேரத்தில் சிறுபான்மையினரின் குறிப்பாக சிறுபான்மையாக உள்ள தமிழர்களின் மனித உரிமைகளை மதிப்பதாகவும் அந்தத் தீர்ப்பு அமைய வேண்டும். இந்திய ா- இலங்கைக்கு இடையே மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதும் சித்ரவதை செய்யப்படுவதும் வேதனை அளிக்கிறது'' என்று தெரிவித்து அந்தக் கருத்து ஏடுகளில் இடம் பெற்றுள்ளது. தமிழர்களின் துயரத்திலும், நாம் நிறைவேற்றிய தீர்மானத்திலும் இந்தியப் பிரதமர் எந்த அளவிற்கு ஈடுபாட்டோடும், நமக்கு ஆதரவாகவும் உள்ளார் என்பதை தெளிவாக்குகின்ற வார்த்தைகளாக அவரது பேட்டி அமைந்துள்ளது.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தைக் கூட ஒருசில ஏடுகள் மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டல் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன. அதைப்பற்றிக் கூட காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டலாக கருதவில்லை. அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதற்கு வேதனை தெரிவித்திருப்பதாகத்தான் கருதவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 16.10.2008 அன்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில், "இலங்கையில் நிலவும் சூழ்நிலை இந்தியாவில் உள்ள எங்களுக்கு பெரிதும் கவலை அளிக்கிறது. தாங்கள் உருவாக்காத சூழ்நிலையின் பிடியில் அப்பாவி மக்கள் சிக்கித்தவிக்கிறார்கள். அவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலை நினைத்துத் தான் நாங்கள் குறிப்பாகக் கவலைப்படுகிறோம்.

அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை அனுமதிக்க வேண்டும். ராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ போர்க்கள வெற்றிகளாலோ இயல்பு நிலையை திரும்ப கொண்டு வர முடியாது என்று இந்தியா உறுதிபட தெரிவித்து வருகிறது.

பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இத்தகைய தீர்வு தான் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்துத் தரப்பினரின் உணர்வுகளையும் பூர்த்தி செய்வதாக அமையும்.

இந்த இலக்கை அடையவும், அப்பாவி மக்களின் கஷ்டங்களை தணிக்கவும் இந்தியா, தனது அதிகாரத்திற்கு உட்பட்டு எல்லா முயற்சிகளையும் எடுக்கும். இது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் இலங்கை அரசின் கவனத்தை இந்திய அரசு ஈர்த்து வருகிறது. இந்திய அரசு கவனம் செலுத்தி வரும் மற்றொரு பிரச்சனை, இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் படுகொலை ஆகும். இத்தகைய கொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதை உறுதிப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றெல்லாம் சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது, அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றி நாம் அனுப்பிய தீர்மானங்களையெல்லாம் நன்றாகப் பரிசீலித்து அதனையேற்றுக் கொள்ளும் வகையிலே மத்திய அரசு செயல்படும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது நமக்கு!

ஆனால் ஜெயலலிதாவிற்கு இதைப்பற்றியெல ்ல ாம் எண்ணிப் பார்க்க நேரமில்லை. 1983ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நானும் பொதுச் செயலாளர் பேராசிரியருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை ஜெயலலிதா கொச்சைப்படுத்தி, அப்போதும் இலங்கைத் தமிழர் பிரச்சனை தீரவில்லையே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவேரி பிரச்சனைக்காக ஜெயலலிதா காலவரம்பற்ற உண்ணாவிரதம் என்று தொடங்கினாரே; பிறகு அதனைத் திரும்பப் பெற்றாரே, காவேரி பிரச்சனை தீர்ந்த பிறகா உண்ணாவிரதத்தை நிறுத்தினார். இல்லையே; அந்தப்பிரச்சனை இன்னமும் முடிந்த பாடில்லையே? இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது ஓராண்டு ஈராண்டுகளாக அல்ல; 1956ஆம் ஆண்டில் சிதம்பரத்திலே நடைபெற்ற தி.மு.க பொதுக் குழுவிலே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அண்ணாவின் கருத்துப்படி ஒரு தீர்மானமாக என்னால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை அப்போது வழி மொழிந்தவர் பெரியவர் அ.பொன்னம்பலனார். அந்தத் தீர்மானத்தின் வாசகங்கள் வருமாறு:

இலங்கையில் சிங்கள மொழி ஆதிக்க ஆட்சியாளர்கள் அங்குள்ள தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதோடு, சிங்கள மொழி ஏகாதிபத்தியத்தை ஏற்படுத்த முயலும் போக்கினை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அங்குள்ள தமிழர்களின் விருப்பங்களும், முயற்சிகளும் வெற்றி பெற வேண்டுமென்று இப்பொதுக்குழு மனமார விரும்புவதுடன், தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களாலான எல்லா ஆதரவையும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறது''.

ஜவக‌ர்லா‌ல ் அ‌றி‌வி‌த் த அ‌ந் த நா‌‌ள ் இ‌ந் த நா‌ள்தா‌ன ்!

1939 ஆம் ஆண்டே பண்டித ஜவகர்லால் நேரு "இண்டியன் இன் சவுத் ஏசியா'' என்ற நூலில ், இந்தியாவுக்கு வெளியே வாழுகின்ற இந்தியர்களைப் பற்ற ி, அப்போது நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு ஒரு செய்தி அனுப்புகிறார்.

அந்த செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது: இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தியா அவர்களையும் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும ், அன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும ், அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்.

இவ்வாறு பண்டித நேரு 1939ஆம் ஆண்டிலேயே வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காக இந்தியாவின் பாதுகாப்புக்கரம் நீளுகின்ற நாள் ஒன்று வரும் என்று அறிவித்தாரே, அந்த நாள் இந்த நாளாக இருக்க வேண்டுமென்றுதான் மத்திய அரசை நோக்கி நாம் குரல் கொடுக்கின்றோம்.

இலங்கைத்தமிழர்களுக்காக தி.மு.க. எதுவும் செய்ய வில்லை என்றதொரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. தி.மு.க பொறுப்பிலே இருந்த போது 1976ஆம் ஆண்டிலும், 1991ஆம் ஆண்டிலும் இரண்டு முறை மத்திய அரசினால் ஆட்சியிலிருந்து கலைக்கப்பட்டது. அந்த இரண்டு முறையும் தி.மு.க. மீது பழி சுமத்தப்பட்டது என்றால், இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. நடந்து கொண்டது என்பது தான் முக்கியமான குற்றச்சாட்டு! தலையாய பழியுமாகும்!

1976 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டபோது, கலைக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை 15.2.1976 அன்று சென்னை கடற்கரையில் அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி உரையாற்றியபோத ு, " தி.மு.க. அரசு இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கையிலே இருக்கின்ற அரசுக்கு விரோதமாக நடைபெற்று வருகின்றது. அது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு ஏற்றதல்ல. கழக ஆட்சியை கலைத்ததற்கு அதுவும் ஒரு காரணம்'' என்று அவரே கூறியிருக்கிறார். எனவே வேறு எதுவும் அதற்கு சான்று தேவையில்லை என்று கருதுகிறேன்.

ஆனால் அதன் பின்னர் நான்கு ஆண்டு கழித்து அதே அன்னை இந்திரா காந்தி 1980இல் அதே கடற்கரைக் கூட்டத்தில் என்னைப் புகழ்ந்துரைத்து; "நட்பாயினும ், பகையாயினும் இரண்டிலும் உறுதியாக இருப்பவர் கருணாநிதி'' என்று கூறியதையும், நான் வாழும் நாள் வரையில் மறக்க முடியுமா?

ஏன்; அன்னை இந்திரா, இலங்கைத் தமிழரின் இன்னல் களைய எடுத்த முயற்சிகள்தான் கொஞ்ச நஞ்சமா?

அ.தி.மு. க ‌ தீ‌‌ர்மான‌த்தை வ‌ழிமொ‌ழி‌ந்த‌வன் நா‌ன ்!

1976 ஆம் ஆண்டு ஆட்சிக் கலைப்புக்குப்பிறகு தி.மு.க 12 ஆண்டு காலம் பதவிப் பொறுப்புக்கு வரவில்லை. அந்த இடைக்காலத்தில் தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த போது இலங்கைத் தமிழர்களுக்காக எதுவுமே செய்யாமல் மவுனமாக இருந்து விடவில்லை.

தி.மு.க ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறது என்பதற்காக இலங்கைத் தமிழர் பிரச்சனையை சில கட்சியினர் அலட்சியம் செய்கிறார்களே, அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக 1981ஆம் ஆண்டு தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த போது, தமிழகச் சட்டமன்றப் பேரவையிலே 21.8.1981 அன்று ஒரு தீர்மானம் அ.தி.மு.க. ஆட்சியினரால் கொண்டு வரப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவராக தி.மு.க. சார்பிலே இருந்த நான் என்ன செய்தேன்? இலங்கைத் தமிழர்க்கான தீர்மானம் அ.தி.மு.க. உறுப்பினர்களால் கொண்டு வரப்படுகிறது என்பதற்காக புறக்கணித்தேனா? அவையிலிருந்து வெளிநடப்பு செய்தேனா? தீர்மானத்தை எதிர்த்தேனா? இடைவிடாது இழிதகை அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தேனா, அம்மையாரைப்போல கிடையாது. அ.தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்காக என்பதால், அந்தத் தீர்மானத்தை வழி மொழிந்து உரையாற்றினேன். அந்த உரையின் சுருக்கம் வருமாறு:

" அரசின் சார்பில் அவை முன்னவரால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தை வழிமொழிகிற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அமெரிக்கா செல்கிற வழியில் எங்களைச் சந்தித்த ஈழத் தமிழர்களின் தலைவர் அமிர்தலிங்கம் அங்கே நடைபெறும் சோகச் சம்பவங்களையெல்லாம் எங்களிடம் விவரித்துச் சொன்னார்.

இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுகிற நேரத்தில் எல்லாம் தமிழ் நாட்டிலிருந்து இந்தியப் பேரரசுக்கு எல்லா கட்சியில் உள்ளவர்களும், கட்சி சார்பற்ற முறையில் கட்சி வேறுபாடுகளையெல்லாம் மறந்து அனைவரும் தமிழர்கள் என்கிற அந்த உணர்வோடு அவதிப்படுகிற தமிழர்கள் இலங்கையில் இருந்தாலும், அவர்கள் உலகத்தின் வேறு எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு தமிழகத்தில் இருக்கிற ஐந்து கோடி தமிழர்களின் ஆதரவு என்றென்றைக்கும் உண்டு என்ற பேருண்மையை நாம் இதிலே கட்சிகளை எல்லாம் மறந்து நிலை நாட்டியிருக்கிறோம். அந்த வகையில் தமிழர்கள் ஒற்றுமையோடு இன்றைக்கு இந்த ஒரு தீர்மானத்திலே இருக்கும் காட்சியை என்னால் காண முடிகிறது. பல கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு, கவனஈர்ப்பு தீர்மானங்கள் இந்தப் பிரச்சனையிலே கொடுக்க வேண்டுமென்று நாங்கள் கருதி, அந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும்கூட, அரசின் சார்பில் ஒரு தீர்மானம் வருவது தான் பொருத்தமுடையது என்ற எண்ணத்துடன் இந்தத் தீர்மானத்தை மனநிறைவோடு வழி மொழிகிறேன்.''

இவ்வாறு அ.தி.மு.க. அரசின் சார்பில் கொண்டு வந்த தீர்மானத்தை பெருந்தன்மையோடு; வழிமொழிந்தவன் தான் நான்.

இனப்படுகொலையை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம்!

நாம் எந்த அளவிற்கு அன்று பெருந்தன்மையோடு தமிழ் உணர்வோடு நடந்து கொண்டோம், இப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா எந்த அளவிற்கு பெருந்தன்மையோடு (ப) நடந்து கொள்கிறார் என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ளது.

இலங்கையிலே உள்ள தமிழ் மக்கள் "கடலுக்கு அப்பால் கரையுண்டு என்றிருந்தோம்; கரையே கடலானால் எங்கே போய்க் கால் வைப்போம்'' என்று இலங்கைத் தமிழ்க் கவிஞன், உணர்ச்சிக் கவிஞன் காசி ஆனந்தன் பாடிய கவிதையைப் பாடிக் கொண்டு, பல ஆண்டுக் காலமாக உகுத்திடும் கண்ணீர்த் துளிகளுக்கு நாம் தரப் போகும் பதில் என்ன?

" ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம்'' என்று பாவேந்தர் தமிழ் இனம் குறித்துப்பாடியது வெறும் சொற்குப்பை தானா?

" வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்'' என்றாரே; அந்தத் தோள்கள் எங்கே?

இன்று இதனை நான் எழுதும்போது தேதி அக்டோபர் பதினெட்டு; இடையிலே இன்னும் மூன்று நாட்கள் தான்! ஆம் 72 மணி நேரம்! சென்னைக்குப் புறப்படத் தயாராகி விட்டாயா? உன்னோடு யார் யார் வருகிறார்கள்? உங்கள் மாவட்டத்திற்கென்று "மனிதச் சங்கிலி''யில் நிற்பதற்கு ஒதுக்கப்பட்ட இடம் எங்கே? தெரிந்து கொண்டு விட்டாயா?

அனைத்துக்கட்சிகளின் சார்பிலும ், கழகத்தின் சார்பிலும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எல்லாம் அனுப்புகின்ற செய்திகள் தங்கள் தங்கள் மாவட்டத்திலிருந்து இத்தனை பேர் வருகிறோம், 'மனிதச் சங்கில ி' யில் பங்கேற்க என்ற தகவல்கள் வந்து குவிகின்றன.

நமது தமிழ் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டிருக்கிறது. எண்ணி எண்ணி ஏங்குகிறேன ், பெருமூச்சு விடுகிறேன். மனம் ஒரு நிலையில் இல்ல ை, உறங்க முடியாமல் தவிக்கிறேன்.

இனம் காப்போம்! இனமானம் காப்போம்! இனப்படுகொலையை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம்!'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments