Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமே‌ஸ்வர‌த்‌து‌க்கு 2000 பேர் நாளை பயணம்: பாரதிராஜா

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (16:09 IST)
இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌‌‌ங்கள இராணுவ‌த்தா‌ல் த‌மிழ‌ர்க‌ள் படுகொலை செ‌ய்ய‌ப்படுவதை க‌ண்டி‌‌த்து ‌த‌மி‌ழ் ‌திரையுலக‌ம் சா‌ர்‌பி‌ல் வரு‌ம் 19ஆ‌ம் தே‌தி ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் நடைபெ‌று‌ம் பேர‌‌ணி‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்வத‌ற்காக 2,000 பே‌ர் நாளை த‌னி ர‌யி‌ல் மூல‌ம் ராமே‌ஸ்வர‌‌ம் செ‌ல்‌கி‌‌ன்றன‌ர் எ‌ன்று இய‌க்குன‌ர் பார‌திராஜா இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர்.

தமிழ்திரையுலகத்தினர் ராமேஸ்வரத்தில் வருகிற 19 ஆ‌ம் தேதி பேரணி பொதுக் கூட்டம் நடத்தி கண்டனத்தை வெளிப்படுத்த உள்ளனர் எ‌ன்று‌ம் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த அனைவரும் இப்பேரணியில் பங்கேற்பார்கள் எ‌ன்று‌ம் பார‌திராஜா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகில் இருந்து காலை 11 மணிக்கு ஊர்வலம் புறப்படும் எ‌ன்று கூ‌றிய பார‌திராஜா, அ‌ன்று மாலை நட‌க்கு‌ம் பொது கூட் ட‌த்‌தி‌ல் அனைத்து சங்க பிரதிநிதிகளும் பேசுகின்றனர் எ‌ன்று‌ம் இரவு 7.30 மணிக்கு கூட்டம் முடிந் தது‌ம் தனி ரயிலில் அனைவரும் சென்னை திரும்புகின்றனர் எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments