Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜபாளையம் நகராட்சி கலை‌ப்பு: தமிழக அரசு உத்தரவு!

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (18:00 IST)
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம ் நகராட்சியை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை முதன்மை செயலர் கே.தீனபந்து வெளியிட்டுள்ள அறிவிக்கையில ், " ராஜபாளையம் நகராட்சி கவுன்சில் தனது கடமையை தொடர்ந்து சரிவர ஆற்றவில்லை என்று தமிழக அரசு கருதுகிறது. இது பற்றி ராஜபாளையம் நகராட்சியிடம் கருத்து கேட்கப்பட்டு அது பற்றி பரிசீலனையும் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு நகராட்சி விதிகள் (1920)-ன்படி ராஜபாளையம் நகராட்சியை கலைத்து ஆளுந‌ர ் பர்னாலா உத்தரவிட்டுள்ளார். இது உடனடியாக அமலுக்கு வருகிறது.

மேலும் வரும் மார்ச் 20ஆ‌ம் தேதிக்குள் ராஜபாளையம் நகராட்சியை மீண்டும் புதிதாக அமைக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார். இந்த கால கட்டத்தில் ராஜபாளையம் நகராட்சி மற்றும் அதன் தலைவரின் பணிகளை திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் கவனிக்க வேண்டும் என்றும் ஆளுந‌ர ் தெரிவித்துள்ளார ்" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ராஜபாளையம் நகரசபை தலைவராக உ‌ள்ள காங்கிரஸ் கட்சிய ை‌ ச் சேர்ந்த ரத்தினம் அம்மாளு‌க்கு‌ம், துணை தலைவராக உ‌ள்ள அ.இ. அ.தி.மு.க.வை சேர்ந்த மணிகண்ட ராஜாவு‌க்கு‌ம் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ராஜபாளையம் நகராட்சியை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments