இதுதொடர்பா க இன்ற ு சென்னையில ் அவர ் வெளியிட்டிருக்கும ் அறிக்கையில ், தமிழ் இன மக்கள் இலங்கையில் படும் தொல்லைகள், கொடிய துன்பங்களில் இருந்து விடுபட்ட ு, இனப் படுகொலை நிறுத்தப்பட்ட ு, நிலையான அமைதி காண்பதற்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 14ஆம ் தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் ஆறு தீர்மானங்களையும் நினைவூட்டி வலியுறுத்திட இந்த மனிதச் சங்கிலி போராட்டம் வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துக் கட்சி தலைவர்களின் ஒப்புதலுடன் வரும் 21ஆம ் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி முதல் சென்னையில் மாபெரும் மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடைபெறும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இந்த மனிதச் சங்கிலி அணிவகுப்பானது, சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களில் உள்ளவர்களும் கலந்து கொள்ளக்கூடிய பிரமாண்டப் பேரணியாக அமையும் என்றும், எனவே அனைவரும் வந்து கலந்து கொள்வதுடன் இந்த அணிவகுப்பை பிரமாண்டமானதாக நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே அனைத்துக் கட்சியினரும், குறிப்பாக மகளிர், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், விவசாயிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் மனிதச் சங்கிலி அணிவகுப்பிற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கருணாநிதி தமது அறிக்கையில் கோரியுள்ளார்.