Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் தாக்கீது!

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (10:06 IST)
தமிழ்நாடு மனித உரிமை அமைப்பின் சேலம் மாவட்டச் செயலர் ராஜு என்பவர் காணாமல் போனது தொடர்பாக அவரை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு தமிழக வேளாண்மை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

தமிழ் நாடு மாநில மனித உரிமை அமைப்பின் தலைவர் பூமொழி என்கிற மொகமது இப்ராஹிம் என்பவர் தா‌க்க‌ல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த தாக்கீதை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும், சேலம் மாவட்ட தி.மு.க செயலருக்கும் அனுப்பியுள்ளது.

சேலம் நகராட்சி எல்லைக்குட்பட்ட நரசோதிப்பட்டி, ரெட்டியூர் ஆகிய இடங்களில் சர்ச்சைக்குரிய நிலங்களை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக அபகரித்து விற்றுள்ள விவகாரத்தை எதிர்த்து ராஜு என்பவர் தீவிரமாக செயல்பட்டு வந்தார் என்று மனித உரிமை அமைப்பின் மாநில தலைவர் மொகமது இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையம், இந்த விவகாரத்தில் நரசோதிப்பட்டி, ரெட்டியூரைச் சேர்ந்த ஏழை மக்கள் சார்பாக செயல்பட்டுவருகிறது என்றார்.

இவர் தா‌க்க‌ல் செய்துள்ள மனுவில், நிலத்தை சிலர் சட்ட விரோதமாக ஆக்ரமித்து அங்கு கட்டிடங்களையும் எழுப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அந்த மனுவில் தெரிவிப்பித்திருப்பதாவது, மனித உரிமை ஆணையம் சேலம் பிரிவு செயலர் ராஜு இந்த சட்ட விரோத நில அபகரிப்பு தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்திருந்தார், ஆனால் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி ராஜு காணாமல் போயுள்ளார். அவரது மனைவி காவல்துறையில் புகார் செய்துள்ளார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments