Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலுக்கு வருமாறு யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது: ரஜினிகாந்த்!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (18:42 IST)
அரசியலுக்கு வருமாறு யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது எ‌ன்று‌ம் அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்கவும் முடியாது எ‌ன்று‌ம் நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் மிகவும் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தனது நிலை குறித்து விளக்கம் அளித்து ரஜினிகாந்த் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில ், '' சமீப காலமாக ரஜினி ரசிகர் மன்றங்களின் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற பேச்சு அன்றாடம் நிலவி வருகிறது. அண்டைய மாநிலத்திலும், தமிழ்நாட்டிலும் நடிகர்களின் அரசியல் பிரவேசத்தினால், நானும் தமிழக அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற எனது ரசிகர்களின் ஆர்வம் எனக்கு நன்றாகப் புரிகிறது.

இறுதியாகவும் உறுதியாகவும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் "அரசியலுக்கு நான் வந்துதான் ஆகவேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்கவும் முடியாது."

அந்த நிலைமையில் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் என்னுடன் இணைவதை நான் வரவேற்பேன ்'' எ‌ன்று நடிக‌ர் ரஜினிகாந்த் கூற ிய ுள்ளார்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments