Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு 10 மணிக்குமேல் ப‌ட்டாசு வெடிக்க தடை!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (17:24 IST)
உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற உ‌த்தர‌வி‌ற்‌கிண‌ங்க காலை 6 ம‌ணி முத‌ல் இரவு 10 ம‌ணி‌க்கு ப‌ட்டாசு வெடி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அத‌ற்கு மே‌ல் ப‌ட்டாசு வெ‌டி‌க்க கூடாது எ‌ன்று‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் பொதும‌க்களு‌க்கு அ‌றி‌வுரை வழ‌ங்‌கியு‌ள்ளன‌ர்.

இது தொட‌ர்பாக ச ென்னை மாநகர காவ‌ல்துறை இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பு:

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற உத்தரவிற்கிணங்க காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியின்படி பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

இதுபோன்ற பட்டாசுகளை தயாரிப்பதும், விற்பதும் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள ்.

மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்கள், பெட்ரோல் நிலையம், மரு‌த்துவமனை ஆகியவற்றின் அருகில் பட்டாசு வெடிப்பது தவிர்க்க வேண்டும்.

பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து வேடிக்கை பார்க்காதீர்கள்.

அதேபோல, மக்கள் நடமாடும் இடங்களிலும் பட்டாசுகளை வெடிப்பது நல்லதல்ல.

குடிசை பகுதிகளின் அருகில், மாடி கட்டடங்கள் மேல் இருந்துகொண்டு ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்காதீர்கள்.

விதிகளுக்கு உட்பட்டு பட்டாசுகளை வெடித்து, விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடும்படி வாழ்த்துகிறோம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments