Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ன்.எ‌ல்.‌சி. தொ‌ழிலாள‌ர் வேலை ‌நிறு‌த்த‌‌ம் ‌வில‌க்க‌ல்!

Webdunia
சனி, 11 அக்டோபர் 2008 (10:52 IST)
தொ‌ழி‌ற்ச‌ங்க‌ங்க‌ங்க‌ள் நட‌த்‌திய பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் மு‌‌ன்னே‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து எ‌ன்.எ‌ல்.‌சி. தொ‌ழிலாள‌ர்க‌ளி‌ன் வேலை ‌நிறு‌த்த போரா‌ட்ட‌‌‌ ம ் வில‌க்‌கி‌க் கொ‌ள்ள‌ப்படுவதாக பா‌ட்டா‌ளி தொ‌ழி‌ற் ச‌ங்க‌‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை, பயணப்படி, சம்பளம் ஆகியவற்றை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாட்டாளி தொழிற்சங்கம் மற்றும் தொ.மு.ச. ஆகிய அமைப்புகள் சார்பில் வேலை ‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌ம் அறிவிக்கப்பட்டது.

தொ‌ழி‌ற்ச‌ங்க‌ங்களு‌க்கு‌ம், ‌‌‌நி‌ர்வாக‌த்து‌க்கு‌ம் இடையே சுமா‌‌ர் 6 ம‌ணி நேர‌ம் நட‌ந்த பே‌ச்சுவா‌ர்‌த்தை தோ‌ல்‌‌வி‌‌யி‌ல் முடி‌ந்ததையடு‌த்து நே‌ற்‌றிரவு முத‌ல் தொ‌ழிலாள‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்‌தி‌ல் இற‌ங்‌கின‌ர். கோ‌ரி‌க்கைக‌ள் ஏ‌ற்க‌ப்படு‌ம் வரை வேலை‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌ம் தொடரு‌ம் எ‌ன்று‌ம் ‌அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர்.

இந்த நிலையில் என்.எல்.சி. தொழிற்சங்கங்களுடன் இன்று காலை சென்னையில் தொழிலாளர் நலத்துறையினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர். இதனால் பா‌ட்டா‌ளி தொழிற் சங்க‌ம் தங்கள் போராட்டத்தை ‌வில‌க்‌கி‌க்கொ‌ள்வதாக அத‌ன் தலைவ‌ர் செல்வராஜ ் அறிவித்து‌ள்ளளா‌ர்.

இன்ற ு கால ை நடைபெறு‌ம் பே‌‌ச்‌சுவா‌ர்‌த்தை‌யி‌ல் எடு‌க்க‌ப்படு‌ம் முடிவை‌ப் பொறு‌த்து தொ‌ழி‌ற்ச‌ங்க‌ங்க‌ளி‌‌ன் அடு‌த்தக‌ட்ட நடவடி‌க்கை எ‌ன்ன எ‌ன்பது தெ‌ரியு‌ம் எ‌ன்று தக‌வ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments