தமிழகத்தில ் ரூ.7,627 கோடி செலவில் 1,600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் 2 புதிய பெரிய மின் திட்டங்கள ை அமைக்க முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானத ு.
TNG
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"தமிழக அரசும், தம ி ழ்நாடு மின் வாரியமும் மத்திய அரசின் கிராமப்புற மின் வசதிக் கழகத்தின் ( Rural Electrification Corporation) நிதியுதவியுடன், வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கம் மற்றும் ந ெ ய்வேலி நிலக்கரி கழகத்துடன் ( Neyveli Lignite Corporation) இணைந்து தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவைக்கு நிரந்தரமாக மற்றும் நீண்டகால தீர்வுக்கு வழிவகுக்கும் வகையில் நடப்பு 2008-2009ஆம் ஆண்டில் ர ூ.7,627 கோடி செலவில் 1,600 மெகாவாட் மின்உற்பத்தி ச ெ ய்யும் 2 புதிய பெரிய மின் திட்டங்களை நிர்மாணித்திடவும், சீரான மின் விநியோகத் திட்டங்களை அமைத்திடவும் ஆவன ச ெ ய்து வருகிறது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், தம ி ழ்நாடு மின்வாரியமும், ந ெ ய்வேலி அனல்மின் நிலையமும், இணைந்து கூட்டுத் துறையில் ர ூ.4,909 கோடி மதிப்பீட்டில் ஒவ்வொன்றும் 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி ச ெ ய்திடும் 2 மின்திட்டங்களை அமைத்திட கிராமப்புற மின்வசதிக் கழகம் ர ூ.3,437 கோடி கடனுதவியும்;
வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் தம ி ழ்நாடு மின்வாரியம் ர ூ.2,718 கோடி மதிப்பீட்டில் 600 மெகாவாட ் மின்உற்பத்தி ச ெ ய்திடும் இரண்டாம் பிரிவை அமைத்திட கிராமப்புற மின்வசதிக ் கழகம் ர ூ.2,175 கோடி கடனுதவியும்; ஆக மொத்தம் ர ூ.5,612 கோடி கடனுதவியை கிராமப்பு ற மின்வசதிக் கழகம், தம ி ழ்நாடு மின்வாரியத்திற்கு வழங்குகிறது.
இந்த திட்டங்களுக்காக இன்று முதலமைச்சர் கருணாநித ி முன்னிலையில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் கிராமப்புற மின்வசதி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் உமாசங்கர், தமிழக மின்வாரியத்தின் தலைவர் மச்சேந்திரநாதன ், ந ெ ய்வேலி நிலக்கரி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜே.என்.பிரசன்ன குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இத ு தவிர, ர ூ.1,132 கோடி மதிப்பீட்டில் கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய 5 மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது நிலத்திற்கு மேற்புறமாக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதை மாற்றி நிலத்தின்க ீ ழ் கேபிள்களைப் பதித்து மின் விநியோகம் ச ெ ய்தல்;
ர ூ.1,078 கோடி மதிப்பீட்டில், கரூர் மாவட்டம் புகளூரிலிருந்து, சென்னைக்கு அருகிலுள்ள கலிவந்தப்பட்டு கிராமம் வரை 325 கி.மீ. நீளத்திற்கு 400 கிலோ வோல்ட் சக்திகொண்ட இரட்டை மின் கடத்தி சாதனங்களை ( Doubl e circuit transmission line) அமைத்தல்;
ர ூ.530 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல் போன்ற மின் வழங்கும் பணிகளை மேம்படுத்துதல்; ர ூ.600 கோடி மதிப்பீட்டில் இதர வசதிகளை ஏற்படுத்துதல் என மொத்தம் ர ூ.3,340 கோடி மதிப்பீட்டில் புதிய மின் திட்டங்களால் தயாரிக்கப்படும் மின்சாரத்தைத் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்புதல் மற்றும் பகிர்ந்து வழங்குதல் ஆகியவற்றுக்கான மிகப்பெரிய திட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.
இந்த திட்டங்களுக்காக, கிராமப்புற மின்வசதிக் கழகம் ஏற்கனவே இந்த ஆண்டில் ர ூ.3,113 கோடி கடனுதவி வழங்கியுள்ளது.இது, தமிழக மின்வாரியத்திற்கு கிராமப்புற மின்வசதிக் கழகம் அளித்துள்ள மிகப் பெரிய நிதியுதவியாகும். இந்நிதியுதவியின் மூலம ் நிறைவேற்றப்படும் புதிய மின்திட்டங்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை நிரந்தரமாகவும், நீண்ட காலத்திற்கும் நிறைவு ச ெ ய்திடும்.