இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி ஆலோசிக்க வரும் 14ஆம ் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.
webdunia photo
FILE
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், " இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழகத்தின் அரசியல் இயக்கங்களும், அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியதன் காரணமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்து விரைவுபடுத்திடவும ், நிலையான அமைதி அங்கே உருவாகிட தக்க முயற்சிகளை மேற்கொள்ளவும ், அங்கே இனப்படுகொலையும், போரும் இல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சித்தலைவர்களின் கூட்டம் ஒன்று வரும் 14 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தமிழக அரசின் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக் கட்சித்தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளார ்" என்று கூறப்பட்டுள்ளது.