Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தீபாவ‌ளி‌க்கு 18 ‌சிற‌ப்பு ர‌யி‌ல் இய‌க்க‌ம்: நாளை மு‌ன்ப‌திவு துவ‌க்க‌ம்!

Webdunia
சனி, 4 அக்டோபர் 2008 (17:54 IST)
தீபாவ‌ளி ப‌ண்டிகையையொ‌ட்டி கூ‌ட்ட நெ‌‌ரிசலை த‌வி‌ர்‌ப்பத‌ற்காக தெ‌ற்கு ர‌யி‌ல்வே தெ‌ன் மாவ‌ட்ட‌ங்களு‌க்கு 18 ‌சிற‌ப்பு ர‌யி‌ல்களை இய‌க்கு‌கிறது. இத‌ற்கான மு‌ன்ப‌திவு நாளை காலை தொட‌ங்கு‌கிறது.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று தெற்கு ரயில்வ ே‌யி‌ன் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி நீனு இட்டியாரா செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தீபாவளி பண்டிக ைய ையொட்டி பொது மக்கள் நெரிசலை தவிர்ப்பதற்காக 18 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு இந்த ரயில்கள் விடப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு நாளை (5 ஆ‌ம் தேத ி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்ன ை- திருச்சி இடையே 4 ரயில்களும், சென்ன ை- நாகர்கோவ ி‌லு‌க்கு 6 ரயில் களு‌ம ், சென்ன ை- திருநெல்வேல ி‌க்கு 2 ரயில் களு‌ம ், தூத்துக்குட ி‌க்கு 4 ரயில் களு‌ம ், சென்ன ை- மதுர ை‌க்கு 2 ரயில் களு‌ம் அ‌க்டோப‌ர் 24ஆ‌ம் தேதி முதல் இயக்கபடுகின்றன.

எழும்பூர்- நாகர்கோவில் (எண ்-0609) சிறப்பு ரயில், 24 ஆ‌ம் தேதி மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. நாகர்கோவிலில் இருந்து மறுநாள் 25 ஆ‌ம் தேதி (எண ்- 0610) என்ற சிறப்பு ரயில் பகல் 1.13 மணிக்கு புறப்பட்டு வருகிறது.

இதே போல 26 ஆ‌ம் தேதி எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு சிறப்பு ரயில் (எண ்-0617) இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. மறுநாள் (27 ஆ‌ம் தேதி) நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு (எண ்- 0618) சிறப்பு ரயில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு வருகிறது.

23 ஆ‌ம் தேதி எழும்பூர் - நாகர்கோவிலுக்கு இரவு 8.25 மணிக்கு ரயில் புறப்பட்டு செல்கிறது. மறு நாள் 24 ஆ‌ம் தேதி பகல் 1.13 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.

24 ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு (எண ்-0603) சிறப்பு ரயில் புறப்பட்டு செல்கிறது. மறுநாள் (25 ஆ‌ம் தேதி) திருநெல்வேலி- எழும்பூருக்கு (எண ்-0604) சிறப்பு ரயில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு வருகிறது.

எழும்பூர்- மதுரைக்கு (எண ்-0625) ரயில் 26 ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் 27 ஆ‌ம் தேதி மதுரையிலிருந்து எழும்பூருக்கு (எண ்- 0626) மாலை 6 மணிக்கு புறப்படுகிறது.

சென்னை- தூத்துக்குட ி‌க்கு 25, 27 ஆகிய தேதிகளில் (எண ்-0685) சிறப்பு ரயில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. அதே போல் தூத்துக்குடியில் இருந்து எழும்பூருக்கு 26, 28 ஆகிய தேதிகளில் (எண ்- 0686) பகல் 2.45 மணிக்கு புறப்படுகிறது.

திருச்சி - சென்னைக்கு 25 ஆ‌ம் தேதி பகல் 3 மணிக்கு (எண ்-0623) சிறப்பு ரயில் புறப்படுகிறது. சென்னை- திருச்ச ி‌க்கு ( எண ்-0624). 25ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது. திருச்சி- எழும்பூருக்கு 26 ஆ‌ம் தேதி மாலை 4 மணிக்கு (எண ்- 0649) இயக்கப்படுகிறது.

எழும்பூர்- திருச்சிக்கு 27 ஆ‌ம் தேதி பகல் 3.15 மணிக்கு (எண ்-0650) ரயில் புறப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு (எண ்- 0629) ரயில் 23 ஆ‌ம் தேதி இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. 24 ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்கு கோவையில் இருந்து சென்ட்ரலுக்கு (எண ்- 0636) ரயில் புறப்படுகிறது.

இதே போல் எர்ணாகுளம்- சென்ட்ரலுக்கு போத்தனூர் வழியாக 27 ஆ‌ம் த ேதி மாலை 5 மணிக்கு (எண ்-0628) ரயில் இயக்கப்படுகிறது.

சென்ட்ரல்- எர்ணாகுளத்துக்கு 28 ஆ‌ம் தேதி மாலை 5 மணிக்கு (எண ்-0627) ரயில் புறப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments