Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு அருகே காந்தி கோ‌யிலில் பொங்கல் வைத்து வழிபாடு!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி!

Webdunia
சனி, 4 அக்டோபர் 2008 (09:18 IST)
ஈரோடு அருகே உள்ள காந்தி கோ‌‌யிலில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

webdunia photoWD
ஈரோடு அருகே உள்ளது கவுந்தப்பாடி. இதன் அருகே உள்ள செந்தாம்பாளையம் கிராமத்தில் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு கோ‌யில் கட்டி உள்ளனர். இந்த கோ‌யிலில் மகாத்மா காந்தி மற்றும் அவரது மனைவி கஸ்தூரிபாய் ஆகியோர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோ‌யிலில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பொதுமக்கள் இந்த கோ‌யிலின் அருகில் உள்ள வாணி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் சுமர்ந்து வந்து மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரிபாய் ஆகியோரின் சிலைகளுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பெண்கள் காந்தி கோ‌விலுக்கு முன் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். மாவிளக்கு ஊர்வலமும் நடத்தினர். விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

Show comments