Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் வாகன உ‌ரிமையாள‌ர்களு‌க்கு த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (16:52 IST)
வாகனத்தின் பதிவு எண் பலகையில் ' G' அல்லது ' அ' எ‌ன் ற எழுத்தை எழுதி உள்ள தனியார் மகி‌ழ்வுந்து உரிமையாளர்கள் உடனடியா க அதனை அழித்து விடுமாறும் தண்டனை நடவடிக்கையினை தவிர்த்திடுமாறு‌ம ் த‌மிழ க அரச ு கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளத ு.

இது கு‌றி‌த்து த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌‌‌யி‌ட்டு‌ள்ள ச‌ெ‌ய்‌தி‌க்‌கு‌றி‌ப்‌பி‌ல், "சில தனியார் மக ி‌ ழ்வுந்து உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தின் பதிவு எண ் பலகையில் ' G' அல்லது ' அ' என்ற எழுத்தை எழுதி உள்ளதும் அதனை பயன்படுத்த ி வாகனத்தை போக்குவரத்து விதிகளுக்கு முரணாக பயன்படுத்துவதும் அரசின ் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 1989-ல் பிரிவு 39-ன்படி வாகனத்தின் பதிவு எண ் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி எழுதப்பட வேண்டும். மேற்படி சட்டப் பிரிவு 39-ல் குறிப்பிட்டு இருப்பதற்கு முரணாக வாகனத்தை பயன்படுத்துவது பிரிவு 192-ன் க ீ‌ ழ் தண்டனைக்குரி ய குற்றமாகும்.

இக்குற்றம் முதல் தடவையாக இருப்பின் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். இரண்டாவது தடவை அல்லது அதற்கு மேலும் இக்குற்றத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 முதல் 10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மேற்படி சட்டத்தின் பிரிவு 207-ன்படி பிரிவு 39-ல் கண்டுள்ளதற்கு எதிராக பயன்படுத்தப்படும் வாகனங்களை கைப்பற்றி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கவும் வழிவகை உள்ளது.

எனவே, தங்கள் வாகனத்தின் பதிவு எண் பலகையில் சட்டத்திற்கு புறம்பாக ' G' அல்லது ' அ' எழுத்தை எழுதி உள்ள தனியார் மகி‌ழ்வுந்து உரிமையாளர்கள் உடனடியா க அதனை அழித்து விடுமாறும் தண்டனை நடவடிக்கையினை தவிர்த்திடுமாறு‌ம் கேட்டுக ் கொள்ளப்படுகிறார்கள ்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments